உலககோப்பை வரலாற்றில் 2 ஆவது அணியாக நெதர்லாந்து படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

NED
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 13-வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவடைந்த வேளையில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடி விட்டன. இந்நிலையில் இன்று அக்டோபர் 9-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நியூஸிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நெதர்லாந்து அணி விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி மட்டுமே நிகழ்த்தியிருந்த ஒரு அரிதான தனித்துவமாக சாதனையை நெதர்லாந்து அணி நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் மூன்று ஓவர்களை மெய்டனாக வீசி உலகக்கோப்பை போட்டிகளில் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசிய அணி என்ற சாதனையை முதன்முறையாக செய்திருந்தது.

- Advertisement -

அப்போது தெ.ஆ அணி சார்பாக ஷான் பொல்லாக் இரண்டு ஓவர்களையும், மகாயா நிடினி ஒரு ஓவரையும் மெய்டனாக வீசியிருந்தனர். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நெதர்லாந்து வீரர் ஆரியன் தத் முதல் ஓவரை மெய்டனாக வீசினார்.

இதையும் படிங்க : CWC 2023 : ஜடேஜா பற்றி முன்கூட்டியே கணித்து வியப்பில் ஆழ்த்திய டிகே.. கல்யாணம் எப்போ என கேட்ட ரசிகர்

பின்னர் இரண்டாவது ஓவரை ரியான் மெய்டனாக வீசினார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரை வீசிய ஆரியன் தத் மீண்டும் அந்த ஓவரை மெய்டனாக வீச உலகக் கோப்பை போட்டியில் முதல் மூன்று ஓவர்களை மெய்டனாக வீசிய இரண்டாவது அணி என்ற சாதனையை 20 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்து படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement