ஸ்கோர்கார்ட் எங்கப்பா.. ஒரே வருஷத்தில் 4 அடி.. இலங்கையை தரை மட்டமாக்கிட்டீங்க.. சோயப் அக்தர் அதிரடி பாராட்டு

Shoaib Akhtar 3
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கில் 92, விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் துரத்திய இலங்கை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அக்தர் பாராட்டு:
மறுபுறம் உலகக் கோப்பையில் தங்களுடைய மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதே முந்தைய சாதனையாகும். அத்துடன் இந்த தொடர்ச்சியான வெற்றிகளால் சென்னை ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று இந்தியா அசத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சால் 3/4 என ஆரம்பத்திலேயே திணறிய இலங்கையின் ஸ்கோர்கார்டில் ரன் எது விக்கெட் எது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சோயப் அக்தர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதாவது பொதுவாகவே ஸ்கோர்கார்டில் முதலாவதாக அதிக ரன்களும் 2வதாக குறைந்த விக்கெட்டுகளும் இருப்பதே வழக்கமாகும்.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் 3/4 என்று ஆரம்பத்திலேயே ரன்களை விட அதிக விக்கெட்களை எடுத்து இந்தியா மிரட்டியதாக அவர் பாராட்டியுள்ளார். அது போக 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் 50 ரன்களுக்கு இலங்கையை சுருட்டி வென்ற இந்தியா இப்போட்டியில் 55 ரன்கள் சுருட்டி அபார வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்த இந்தியா இப்போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிங்க: வகார் யூனிஸ் போல.. வரலாற்றில் முதல் இந்திய பவுலராக ஷமி செய்த நினைத்து பார்க்க முடியாத சாதனை

அந்த வகையில் ஒரே வருடத்தில் தலா 2 முறை 75 ரன்களுக்குள்ளும் 300+ ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கையை தெறிக்க விட்டு இந்தியா வென்றுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “விக்கெட்கள் வரிசை எது. ரன்கள் வரிசை எது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 2023 வருடத்தில் மட்டும் இலங்கையை 2 முறை 75 ரன்களுக்குள் இந்தியா வீழ்த்தியது. மேலும் 2 முறை 300 ரன்கள் வித்தியாசத்திலும் ஒரு முறை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றுள்ளது. இது தரை மட்டமான இடிப்பாகும்” என்று கூறினார்.

Advertisement