உண்மையாவே ரோஹித் சர்மாவை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஏன் தெரியுமா? – சோயிப் அக்தர் பேட்டி

Akhtar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்தது. கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 240 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி சார்பாக துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அடித்த சிறப்பான சதம் காரணமாக அந்த அணி 43 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்து தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மைதானத்திலேயே தோல்வியை ஏற்றுக்கொண்டால் முடியாமல் கண்ணீர் சிந்தியதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

இந்த தொடரின் முதல் 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ரோகித் சர்மாவின் நிலை குறித்த தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு கேப்டனாகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். என்னை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையை வெல்ல முழுக்க முழுக்க தகுதியான ஒரு வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான்.

இதையும் படிங்க : நாட்டுக்காக விளையாடும் போது அதெல்லாம் மறந்துடும்.. 2015 உ.கோ வேதனையை நினைவு கூர்ந்த ஷமி

ஏனெனில் தனது தனிப்பட்ட சாதனைகளை பற்றி யோசிக்காமல் அணி வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே அவர் விளையாடினார். இந்த கோப்பையை அவர் எப்படி ஜெயிக்கவில்லை என்பதை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே இந்த கோப்பையை கைப்பற்றாத ரோகித் சர்மாவை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது என சோயிப் அக்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement