நாட்டுக்காக விளையாடும் போது அதெல்லாம் மறந்துடும்.. 2015 உ.கோ வேதனையை நினைவு கூர்ந்த ஷமி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது. ஏனெனில் லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி கைக்கு கிடைத்த கோப்பையை கோட்டை விட்டது.

அதனால் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் களத்திலேயே கண்ணீர் விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. குறிப்பாக முதல் 4 போட்டிகளில் விளையாடாத ஷமி அதற்கடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடி 24 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் வெற்றியை காண முடியாமல் தோல்வியை சந்தித்தார்.

- Advertisement -

ஷமியின் வேதனை:
இந்நிலையில் இதை விட 2015 உலகக் கோப்பையில் முழங்கால் வலியுடன் விளையாடி வெற்றிக்கு போராடியும் தோல்வியை சந்தித்ததை இன்னும் மறக்க முடியவில்லை என்று ஷமி தெரிவித்துள்ளார். அந்த தொடரில் காயத்தால் அவதிப்பட்ட தருணங்களை பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2015 உலக கோப்பையில் நான் சந்தித்த வலியை யாரும் அறிய மாட்டார்கள்”

“ஏனெனில் அத்தொடருக்கு முன்பாக எனது முழங்காலில் வீக்கம் இருந்தது. அதனால் வேறு யாராவது அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த வலியை தாங்கும் சக்தி என்னிடம் இருந்தது. அப்போது என்னிடம் ஒன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அல்லது உலக கோப்பையில் விளையாடி விட்டு அறுவை சிகிச்சைக்கு செல்லுங்கள் என்று அணி நிர்வாகம் தெரிவித்தனர். அதனால் நான் அணியுடன் இணைந்து விளையாடினேன்”

- Advertisement -

“அத்தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைக்கு செல்வார்கள். ஆனால் நான் மருத்துவமனைக்கு சென்று ஊசிகளையும் முதலுதவிகளையும் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் நாட்டுக்காக விளையாடும் போது உங்களுக்கு அனைத்தும் மறந்து விடும்” என்று கூறினார். அதாவது நாட்டுக்காக விளையாடி அசத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் வலிகளை பொருட்படுத்தாமல் 2015 உலகக்கோப்பையில் விளையாடியதாக ஷமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எங்களால நாளைக்கே எல்லாத்தையும் மறக்க முடியாது.. கேப்டன் சூர்யாகுமார் சோகமான பேட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் நடப்பு சாம்பியனாக விளையாடிய இந்தியா இதே போலவே லீக் மற்றும் காலிறுதி சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வெற்றி நடை போட்டது. அதனால் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாலுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பி தோற்றது. குறிப்பாக விராட், ரோஹித், தவான் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கடைசியில் தோனி அரை சதமடித்து போராடியும் இந்தியா தோற்றது.

Advertisement