நாங்க ஜெயிக்க நினைச்சோம்.. ஆனா அவர் வேற பிளான் பண்ணிட்டாரு.. குல்தீப் யாதவ் உருக்கமான பதிவு

Kuldeep Yadav
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக செமி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது உட்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்த இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்தனர்.

அதனால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஃபைனலில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா சுமாராக விளையாடி பல கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இருப்பினும் கடந்த 10 வருடங்களாகவே இப்படி லீக் சுற்றில் அபாரமாக செயல்படும் இந்தியாவுக்கு நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டமும் கை கொடுக்காததாலயே தோல்விகள் கிடைத்து வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

சென்னை டூ அகமதாபாத்:
இந்நிலையில் தோல்வியை சந்தித்தாலும் சென்னை முதல் அகமதாபாத் வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் தாங்கள் சிறப்பாக விளையாடியதை நினைத்து பெருமைப்படுவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் முக்கிய நேரத்தில் சற்று அதிர்ஷ்டம் கைகொடுக்காமல் கடவுள் வேறு திட்டத்தை போட்டதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி ட்விட்டரில் மிகப்பெரிய பதிவில் கூறியுள்ளது பின்வருமாறு.

“சென்னை முதல் அகமதாபாத் வரை எங்களுடைய பயணம் இருந்தது. அதன் முடிவு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் கடந்த 6 வாரங்களில் நாங்கள் செய்த சாதனைகளுக்காக பெருமைப்படுகிறோம். இப்போதுள்ள வலியை தாண்டி அடுத்த வாய்ப்பில் நாங்கள் கடினமாக உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்த பயிற்சியாளர் குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்”

- Advertisement -

“அதை விட 9 வெவ்வேறு மைதானங்களில் விளையாடிய போது எங்களுக்கு ஆதரவையும் உத்வேகத்தையும் கொடுத்த ரசிகர்கள் எங்களின் நெஞ்சத்தைத் தொட்டனர். உலக அளவில் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். தோல்வியின் வலி நீடிக்கும். இந்த சமயத்தில் நாம் வாழ்க்கையை போலவே அதை கடந்து முன்னேற வேண்டும். இதிலிருந்து குணமடைய இன்னும் நேரம் எடுக்கும். உலகக் கோப்பை அழகாக இருந்தது”

இதையும் படிங்க: தெ.ஆ தொடரில் ரகானேவை ஓரம்கட்டும் பிசிசிஐ.. கேஎஸ் பரத்துக்கு பதிலாக புதிய கீப்பர்.. வெளியான தகவல்

“ஆனால் கடவுளுக்கு வேறு திட்டங்கள் இருந்ததாக தெரிகிறது. இது எங்களுடைய எனர்ஜிகளை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நேரமாகும். இந்த பின்னடைவை சமாளிப்பது கடினமானது. ஆனால் நாம் நம்பிக்கையை வைத்து முன்னோக்கிய பயணத்தை நம்புகிறோம்” என்று கூறினார். அந்த வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகள் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாத நிலையில் ஃபைனல் வரை சென்று போராடி வீழ்ந்த ந்த இந்தியா பெருமைப்படும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement