தெ.ஆ தொடரில் ரகானேவை ஓரம்கட்டும் பிசிசிஐ.. கேஎஸ் பரத்துக்கு பதிலாக புதிய கீப்பர்.. வெளியான தகவல்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்றமான தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது.

குறிப்பாக வரலாற்றில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருமுறை கூட இந்தியா டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2021/22 பயணத்தில் 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை கோட்டை விட்ட இந்தியாவின் கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் பதவியை ராஜினாமா செய்தது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது.

- Advertisement -

அணியில் மாற்றங்கள்:
இந்நிலையில் அத்தொடரில் சீனியர் வீரர் அஜிங்ய ரகானேவை ஓரம் கட்டுவதற்கு தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு கட்டத்தில் முக்கிய வீரராக இருந்த ரகானே துணை கேப்டனாக 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 36க்கு ஆல் அவுட்டாகி தடுமாறிய போது விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) கணக்கில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ஆனாலும் அதன் பின் சுமாரான ஃபார்மில் திண்டாடிய அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டது. இருப்பினும் 2023 ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் மீண்டும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு தேர்வாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடினார்.

- Advertisement -

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர், கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்பும் பிசிசிஐ புஜாராவை போல ரகானேவையும் கழற்றி விடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதே போல 2023 பார்டர் – கவாஸ்கர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரிஷப் பண்டுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் சுமாராகவே விளையாடினார். எனவே 30 வயதை கடந்து அவருக்கு பதிலாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இசான் கிசானை விக்கெட் கீப்பராகவும் 2023 உலகக்கோப்பையில் அசத்திய கேஎல் ராகுலை பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க: கவலையே படாம இதை மட்டும் பண்ணுங்க போதும்.. ஆஸி டி20 தொடருக்கு முன்னர் – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “நீண்ட காலத்தை வைக்காத இளம் வீரர்களை வளர்ப்பதில் தேர்வு குழு தெளிவாக இருக்கிறது. எனவே ஷ்ரேயாஸ் ஐயர், கில் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதால் ரகானேவுக்கு குறைந்த வாய்ப்பே இருக்கிறது. கேஎல் ராகுலை பேக் அப் விக்கெட் கீப்பராக பயன்படுத்துவதற்கான திட்டமும் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement