இப்டியா கேப்டன்ஷிப் செய்வீங்க? இந்தியாவுக்கு சவாலை கொடுத்தும் பாபர் அசாமை தாக்கிய சோயப் அக்தர் – காரணம் என்ன

Shoaib Akhtar 3
- Advertisement -

விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கடுமையாக போராடி 48.5 ஓவரில் 266 ரன்களும் எடுத்தது.

அதிகபட்சமாக இசான் கிசான் 82 ரன்களும் ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை சாய்த்து பெரிய சவாலை கொடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக தங்களை மழை தடுத்த போதிலும் ஏற்கனவே நேபாளை தோற்கடித்ததால் மொத்தம் 3 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 66/4 என இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

விமர்சித்த அக்தர்:
அதனால் 150 ரன்களை கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக பேட்டிங் செய்து 5வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து 267 என்ற நல்ல ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். அதன் காரணமாக ஒருவேளை மழை வராமல் இருந்து இந்தியாவும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் தெறிக்க விட்ட பாகிஸ்தான் 267 ரன்களுக்கு பதிலாக இந்தியாவை 170 – 200 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி நல்ல துவக்கத்தை பெற்ற பின் அட்டாக் செய்யாத அளவுக்கு பாபர் அசாம் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்த போது எதிரணியை இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் விளையாட அனுமதித்திருக்கக் கூடாது”

- Advertisement -

“அந்த வகையில் நல்ல துவக்கத்தை பெற்ற பாகிஸ்தான் அவர்களை 40 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்திருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்திலேயே இந்தியாவின் தன்னம்பிக்கை குறைந்து போயிருந்தது. அதனால் அவர்கள் 170 – 200 ரன்களுக்கு அவுட்டாகியிருப்பார்கள். அந்த இடத்தில் பாபர் சிறிய தவறு செய்ததாக நான் கருதுகிறேன். குறிப்பாக இந்தியா தடுமாறிய சமயத்தில் நீங்கள் 15 – 17 ஓவர்கள் ஸ்பின்னர்களை வீச அனுமதித்தது சரியான முடிவல்ல என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித்தை சீக்கிரம் தூக்க அந்த பிளான் ரெடியா வெச்சிருக்கோம் – நேபாள் கேப்டன் தில்லான பேட்டி

“ஏனெனில் நீங்கள் தொடர்ந்து அட்டாக் செய்திருக்க வேண்டும். அதிலும் நல்ல துவக்கத்தை பெற்ற நீங்கள் தடுப்பாட்டு அணுகு முறையுடன் செயல்படக்கூடாது. அதே சமயம் இஷான் – பாண்டியா ஆகியோர் ஸ்ட்ரைக்கை மாற்றி சிங்கிள் டபுள் எடுத்து இன்னிங்ஸை உருவாக்கினார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு தேவைப்பட்ட சமயத்தில் இசான் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். அவர்களுடைய ஆட்டத்தால் அப்போட்டியில் இந்தியா மீண்டும் வெற்றிப்பாதையில் நடக்கக்கூடிய அளவுக்கு திரும்பியது” என்று கூறினார்.

Advertisement