CWC 2023 : அவர் கூட தான் சென்னை ஹீட்டில் இந்தியாவை காப்பாத்துனாரு.. ரிஸ்வானை விமர்சித்த அக்தர்

Shoaib Akhtar 2
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்தியா அடுத்ததாக அக்டோபர் 14ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்வது அனைவரிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மறுபுறம் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடும் நிலையில் பயிற்சி போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. ஆனால் முதன்மை போட்டிகளில் நெதர்லாந்தை வீழ்த்திய அந்த அணி இலங்கைக்கு எதிராக 345 ரன்கள் சேசிங் செய்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அக்தர் விமர்சனம்:
எனவே இலங்கையை அடித்து நொறுக்கிய அதே வேகத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடி வெற்றி காண்பதற்கு தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக அப்போட்டியில் 131 ரன்கள் குவித்த ஆட்டநாயகன் விருது வென்ற முகமது ரிஸ்வான் தெரிவித்து இருந்தார். அதை விட அந்தப் போட்டியில் ஒரு கட்டத்திற்கு பின் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்தது போல் அவர் நடித்தது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களையும் கிண்டலடிக்க வைத்தது.

சொல்லப்போனால் இறுதியாக “சில நேரங்களில் அது காயம் சில நேரங்களில் அது நடிப்பு” என்று அவரே போட்டியின் முடிவில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2/3 என இந்தியா சரிந்த போது அதிக வெப்பம் கொண்ட சென்னையில் 50 ஓவர் விக்கெட் கீப்பிங் செய்ததுடன் 97* ரன்கள் அடித்த ராகுல் எந்த காயத்தையும் சந்திக்காமல் வெற்றி பெற வைத்ததாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அப்படியிருக்கையில் உங்களுக்கு மட்டும் எப்படி இது போல் அடிக்கடி தசைப்பிடிப்பு வருகிறது என்று ரிஸ்வானை விமர்சிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ரிஸ்வான் அடிக்கடி தசைப்பிடிப்புகளை சந்திக்கிறார். நீங்கள் ஒரு பெரிய யூனிட்டை கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்து சதமடிப்பது உடலுக்கு கடினமானதாகும்”

இதையும் படிங்க: CWC 2023 : இதனால தான் நாம 10 வருஷமா உ.கோ ஜெயிக்காம இருக்கோம்.. ராகுலை விமர்சித்த கம்பீர்

“ஆனால் இதை விட அழுத்தமான சூழ்நிலையில் கேஎல் ராகுல் வெப்பமான சென்னையில் விக்கெட் கீப்பிங் செய்து கிட்டத்தட்ட சதமடித்தார். இருப்பினும் ரிஸ்வான் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக 70 ரன்கள் அடித்த பின் அவர் விளையாடிய விகிதத்தை பார்த்தது நெஞ்சை தொடுவதாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement