CWC 2023 : இதனால தான் நாம 10 வருஷமா உ.கோ ஜெயிக்காம இருக்கோம்.. ராகுலை விமர்சித்த கம்பீர்

gautam gambhir 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முன்னதாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர். அதனால் 2/3 என திண்டாடிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போதிலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி 85 ரன்கள் ராகுல் 97* ரன்களும் அடித்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
அதிலும் எதிரணிக்கு எவ்விதமான கேட்ச்களும் கொடுக்காமல் துல்லியமாக விளையாடிய ராகுல் ஆட்டநாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதை விட அப்போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கிய போது 91 ரன்களில் இருந்த அவர் சதத்தை தொடுவதற்காக மெதுவாக பவுண்டரி அடித்தார். ஆனால் தம்மையும் அறியாமல் நல்ல டைமிங் கொடுத்ததால் சிக்ஸர் பறந்த பந்து அவருடைய சதத்தை தடுத்தது.

அதனால் களத்தில் ஏமாற்றத்துடன் அமர்ந்த அவர் சிக்ஸர் பறந்து தம்முடைய சதத்தை தடுத்த பந்தை பார்த்து சிரித்துக் கொண்டே வித்தியாசமான ரியாக்சன் கொடுத்தார். மேலும் அந்த சமயத்தில் சதமடிக்க முயற்சித்ததாக தெரிவித்த அவர் இன்னொரு நாள் அதை சிக்சருடன் தொடுவேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி சதம் போன்ற சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாலேயே கடந்த 2013க்குப்பின் 10 வருடங்களாக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் 30, 40 அல்லது 140 ரன்கள் அடித்தாலும் அதை முக்கியமல்ல. மாறாக அணி வெல்கிறதா என்பதே முக்கியம். அனேகமாக இப்படி நாம் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதே கடந்த பல வருடங்களாக ஐசிசி தொடர்களில் வெல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: CWC 2023 : 45 என்றாலே கில்லி தான்.. தனது வாழ்நாள் சிக்ஸர் சாதனையை உடைத்த ரோஹித்துக்கு – கெயில் பாராட்டு

“என்னைப் பொறுத்த வரை நீங்கள் சதம் அல்லது எந்திரங்கள் அடித்தாலும் அது முக்கியமல்ல. இறுதியில் உங்களுடைய அணி வெல்ல வேண்டும். நீங்கள் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியமாகும். எனவே சாதனைக்காக முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். நீங்கள் சதமடிப்பது முக்கியமல்ல. அணியை வெற்றி பெற வைத்தீர்களா இல்லையா என்பதே முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement