CWC 2023 : 45 என்றாலே கில்லி தான்.. தனது வாழ்நாள் சிக்ஸர் சாதனையை உடைத்த ரோஹித்துக்கு – கெயில் பாராட்டு

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. மேலும் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குறிப்பாக டெல்லியில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் 131 (84) ரன்கள் விளாசி எளிதாக வெற்றி பெற உதவினார். அதிலும் 63 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக் கோப்பையில் வேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் (72 பந்துகள்) சாதனையை உடைத்தார்.

- Advertisement -

கெயில் பாராட்டு:
அத்துடன் மொத்தமாக 7 சதங்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சரித்திர சாதனையை தவிர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அதை விட 5 சிக்சர்கள் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை பிடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து மாபெரும் உலக சாதனை படைத்தார்.

கடந்த 2007இல் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டில் முறையே 77, 297, 182 என மொத்தம் 556 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதற்கு முன் சிக்சர்களை அடித்து உலக பவுலர்களை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 554 சிக்ஸர்களை நினைத்ததை இதுநாள் வரை சாதனையாக இருந்தது. பொதுவாக சிக்சர்களை அடிப்பதற்கு நல்ல உடற்கட்டு தேவை என்றே சொல்லலாம்.

- Advertisement -

அந்த வகையில் கிறிஸ் கெயில் நல்ல உடற்கட்டுடன் பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்து அசால்டாக சிக்சர்களை பறக்கவிடுவதில் வல்லவர். மறுபுறம் சாதாரண உடலை கொண்டு இருந்தாலும் பேட்டிங்கில் அற்புதமான டைமிங் கொண்டிருப்பதன் காரணமாக ரோகித் சர்மா இன்று அவரையே மிஞ்சி உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் உன்னுடைய வாழ்நாள் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவுக்கு ட்விட்டரில் கெயில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rohit Sharma Tweet

குறிப்பாக தம்மை போலவே 45 என்ற ஜெர்ஸி நம்பரை கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர் “வாழ்த்துக்கள் ரோகித் சர்மா. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள். 45 எப்போதுமே ஸ்பெஷல்” என்று பாராட்டியுள்ளார். அதாவது தம்மை போலவே 45 என்ற ஸ்பெஷல் ஜெர்ஸி நம்பரை கொண்டுள்ள ரோகித் சர்மா தம்முடைய சாதனையை உடைத்ததில் மகிழ்ச்சி என்ற வகையில் கெயில் பாராட்டியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள ரோகித் “4, 5 நம்முடைய பின்புறத்தில் இருந்தாலும் 6 தான் நமக்கு மிகவும் நமபர்” என்று பதிலளித்துள்ளார்

Advertisement