
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்களின் மீது வன்மத்தை கக்கும் வகையில் பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தற்போது அக்சர் பட்டேலை மற்றொரு பாக் வீரருடன் ஒப்பிட்டு தன்னுடைய வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் இருக்கும் அக்சர் பட்டேலை விட முகமது நவாஸ் தான் சிறந்த வீரர். ஏனெனில் இடது கை சுழப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அழுத்தமான வேளையில் தனது நேர்த்தியான ஆட்டத்தினால் பேட்டிங்கில் ஒரு கேமியோ விளையாடிய அவர் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
என்னை பொறுத்தவரை அக்சர் பட்டேல் ஒன்றும் முகமது நவாஸை விட சிறந்த வீரர் கிடையாது. முகமது நவாஸ் மிகச்சிறப்பான ஒரு ஆல்ரவுண்டர் என சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்திற்கு இந்திய ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து தங்களது கார சார பதில்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எழுதி வெச்சுக்கோங்க.. ஃபைனலில் அவரை காலி பண்ணிட்டா இந்தியா மண்ணை கவ்வும்.. பாகிஸ்தானுக்கு அக்தர் அட்வைஸ்
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இன்று செப்டம்பர் 26-ஆம் தேதி இலங்கை அணிக்கு தங்களது கடைசி போட்டியில் விளையாடயிருக்கிறது. அதனபின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.