ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அத்தொடரில் லீக் சுற்றில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. அதனால் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகத் திகழும் இந்தியா இத்தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானை 2 முறை வீழ்த்தியுள்ளது. அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை 7 முறை இந்தியா தோற்கடித்துள்ளது. மறுபுறம் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் எஞ்சிய போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
எழுதி வெச்சுக்கோங்க:
அதனால் ஆசியக் கோப்பையில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறித்தனத்துடன் பாகிஸ்தான் காத்திருக்கிறது. இந்நிலையில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் ஷர்மாவை முதல் 2 ஓவரில் அவுட்டாக்க வேண்டும் என்று பாகிஸ்தானை முன்னாள் சோயப் அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
அதை செய்தால் கண்டிப்பாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தானில் இருக்கும் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அந்தர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஒருவேளை முதல் 2 ஓவர்களில் அபிஷேக் சர்மா அவுட்டானால் இந்தியா சிக்கலுக்குள் விழுவார்கள்”
சோயப் அக்தர் அட்வைஸ்:
“அபிஷேக் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பினால் இந்தியா திணற ஆரம்பிப்பார்கள். நல்ல ஃபார்மில் இருக்கும் அபிஷேக் தவறாக விளையாடவே மாட்டார் என்று அர்த்தமல்ல. அவரும் தவறாக விளையாடுவார். நீங்கள் இந்தியாவின் ஈகோவை கொல்வதற்காக செல்ல வேண்டும். நீங்கள் சண்டையிட வந்தால் ரன்கள் அடிக்க உழைக்க வேண்டும் என்பதை இந்தியா உணர்வார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவை விட்றாதீங்க பழி வாங்கியே தீரனும்.. கெஞ்சிய பாகிஸ்தான் ரசிகருக்கு.. ஹரிஷ் ரவூப் கொடுத்த பதில்
இதற்கிடையே ஃபைனலில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்தியா உட்பட எந்த அணியையும் தங்களால் இறுதிப் போட்டியில் தோற்கடிக்க முடியும் என்று வங்கதேசத்தை வீழ்த்திய பின் கேப்டன் சல்மான் ஆகா கூறியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக அரை கூவல் விடுத்து வரும் பாகிஸ்தானுக்கு இறுதிப் போட்டியில் இந்தியா செயலில் பதிலடி கொடுக்குமா? என்பதை பார்ப்போம்.



