இந்தியாவை விட்றாதீங்க பழி வாங்கியே தீரனும்.. கெஞ்சிய பாகிஸ்தான் ரசிகருக்கு.. ஹரிஷ் ரவூப் கொடுத்த பதில்

Pakistan Fan
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 41 வருட ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

அந்தப் போட்டியில் இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. ஏனெனில் இத்தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அத்துடன் 2021க்குப்பின் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் இந்திய அணியிடம் பாகிஸ்தான் 7 முறை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவை பழி வாங்கனும்:

அது போக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்கவில்லை. அப்படி ஜென்டில்மேன்களாக கை கொடுக்க வந்த தங்களைப் புறக்கணித்த இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வெறியுடன் காத்திருக்கின்றனர்.

அதன் உச்சமாக வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ஹரிஷ் ரவூப் பவுண்டரி எல்லைக்கு சென்று பாகிஸ்தான் ரசிகர்களிடம் கை கொடுத்தார். அங்கே ஒரு ரசிகர் ஹரிஷ் ரவூப் கையைப் பிடித்துக் கொண்டு. “பழி தீர்க்க வேண்டும். இந்தியாவை விட்டு விடாதீர்கள். கடவுளின் பொருட்டு செய்யுங்கள். ப்ளீஸ்” என்று சொன்னார்.

- Advertisement -

ஹரிஷ் ரவூப் பதில்:

அத்துடன் தம்முடைய இருக்கையையும் எடுத்து கும்பிட்டவாரு “ப்ளீஸ். எப்படியாவது இந்தியாவை தோற்கடியுங்கள். ஐ லவ் யூ” என்று அடி வயிற்றிலிருந்து கத்திய அந்த ரசிகர் கெஞ்சியவாறு ரவூப்பிடம் கேட்டுக்கொண்டார். அதை சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்ட ஹரிஷ் ரவூப் “கண்டிப்பாக வீழ்த்துகிறோம்” என்று அந்த ரசிகரிடம் தலையை அசைத்து சொல்லி காற்றில் முத்தத்தை பரிசாக கொடுத்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் அந்த ஈகோவை உடைங்க.. இதை செஞ்சு கம்பீர் முகத்தில் கரிய பூசுங்க.. பாக்கிற்கு அக்தர் அட்வைஸ்

அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் 26 சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்துவதற்கு காரணமான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உத்தமர்கள் போல் நடிப்பது நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். மேலும் கடந்தப் போட்டியில் ஃபர்கான், ரவூப் ஆகியோர் துப்பாக்கியால் சுடுவது போலவும், 6 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்ற போலியான கருத்தை செய்கைகளாக செய்து காட்டியும் இந்தியாவை கிண்டலடித்தனர். அதற்கெல்லாம் செயலால் பதிலடி கொடுக்க நாங்களும் ஃபைனலுக்கு காத்திருக்கிறோம் என்று இந்திய ரசிகர்கள் சொல்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement