இந்தியாவின் அந்த ஈகோவை உடைங்க.. இதை செஞ்சு கம்பீர் முகத்தில் கரிய பூசுங்க.. பாக்கிற்கு அக்தர் அட்வைஸ்

Shoaib Akhtar 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே திணறிய பாகிஸ்தான் 49/5 என தடுமாறியது. அப்போது போராடி 135/8 ரன்களை குவித்த பாகிஸ்தான் அடுத்து விளையாடிய வங்கதேசத்தை 124/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.

அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் தகுதி பெற்றது. சொல்லப்போனால் 41 வருட ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். அதில் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறித்தனத்துடன் பாகிஸ்தான் உள்ளது.

- Advertisement -

ஈகோவை உடைங்க:

அதை பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவை நம்பர் ஒன் அணி என்று நினைக்காமல் சாதாரணமாக நினைத்து விளையாடினாலே வங்கதேசத்தை போல எளிதாக தோற்கடிக்க முடியும் என்று அக்தர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தங்களை குறைத்து மதிப்பிடும் கௌதம் கம்பீர் முகத்தில் ஃபைனலில் வென்று பாகிஸ்தான் கரியைப் பூசும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படி செய்து இந்தியாவின் ஒளியையும் ஈகோவை கொல்ல வேண்டுமென அக்தர் பாகிஸ்தான் அணியை அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி பாகிஸ்தானில் உள்ள ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் ஒளியை தள்ளி வைத்து விட்டு தற்போதைய மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். இந்தியாவின் ஒளியை உடையுங்கள். வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய அதே மனநிலையுடன் இந்தியாவையும் எதிர்கொள்ளுங்கள்”

- Advertisement -

அக்தர் அட்வைஸ்:

“அதுவே உங்களுக்குத் தேவை. நீங்கள் 20 ஓவர்கள் பந்து வீசத் தேவையில்லை. எதிரணியின் விக்கெட்டுகளை எடுத்தால் போதும். நீங்கள் ஈகோவை கொல்வதற்காக செல்ல வேண்டும். நீங்கள் சண்டையிட்டால் ரன்கள் அடிப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை இந்தியா உணர்வார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக உங்களுடைய முதன்மை ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியிடம் கௌதம் கம்பீர் சொல்வார் என்பது எனக்குத் தெரியும்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? முக்கிய அப்டேட்டை வழங்கிய – அஜித் அகார்கர்

“பாகிஸ்தான் மிகவும் மோசமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள். அவர்கள் மோசமான அணியை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று கௌதம் கம்பீர் இந்திய அணியிடம் தெரிவித்திருப்பார். ஆனால் ஃபைனலுக்கு வந்ததும் பாகிஸ்தான் தங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வெல்லும். அது எங்களுடைய காலத்திலும் நடந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement