இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார். அந்தத் தொடரின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் தனது காலில் காயமடைந்தார்.
ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? : அஜித் அகார்கர்
விரல் பகுதியில் ஏற்பட்ட அந்த காயம் எலும்பு முறிவாக மாறியதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இருந்து விலகிய அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இதன் காரணமாக கடந்த பல வாரங்களாகவே ஓய்வில் இருந்து வரும் அவர் தற்போது மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்.
ஆனாலும் தனது காயம் முழுமையாக குணமடையவில்லை என்பதனால் தற்போது வரை அவர் எவ்வித பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரிஷப் பண்டிற்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும் அவர் எப்போது இந்திய அணியுடன் இணைவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியை எட்டாத காரணத்தினால் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்கிறார். கூடுதல் விக்கெட் கீப்பராக தமிழகத்தை சார்ந்த நாராயணன் ஜெகதீசனுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? என்பது குறித்த முக்கிய அப்டேட்டை தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைக்கு ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமடையவில்லை என்பதனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை தவற விட்டுள்ளார்.
இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான இன்றைய கடைசி போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ
ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரின் போது திரும்புவார் என்று தான் நம்புவதாக அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



