ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-ஆவது போட்டியானது இன்று துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணிக்கு கடைசி போட்டி என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் ஏற்கனவே இந்திய அணியானது சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணி ஆகியவற்றை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை உறுதி செய்து விட்டது.
இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் :
இதன் காரணமாக இன்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கூட செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி.
இதன் காரணமாக சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கி இந்த தொடரில் விளையாடாத சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரரான சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் இந்த ஆசிய தொடர் முழுவதுமே அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
அதனால் அவருக்கு ஒரு பிரேக் வழங்கும் வகையில் இந்த ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார். சுப்மன் கில்லுக்கு பதிலாக பினிஷராக களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோன்று பந்துவீச்சு துறையில் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம்பெற வாய்ப்புள்ளது.
இப்படி அவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டால் இறுதிப் போட்டிக்கு தயாராக வருவார்கள் என்பதாலும் இந்த மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. இது தவிர்த்து கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதன்படி இன்றைய இலங்கை அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ஃபைனலில் இந்தியா தோற்கடித்து கோப்பையை தூக்குவோம்.. 2 ஸ்பெஷல் காரணம் பற்றி பாக் கேப்டன் சல்மான் பேட்டி
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ரிங்கு சிங், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.



