ஃபைனலில் இந்தியா தோற்கடித்து கோப்பையை தூக்குவோம்.. 2 ஸ்பெஷல் காரணம் பற்றி பாக் கேப்டன் சல்மான் பேட்டி

Salman agha 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 135/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 49/5 என ஆரம்பத்திலேயே திணறிய பாகிஸ்தான் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது லோயர் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய முஹம்மது ஹாரிஸ் 31, சாகின் அப்ரிடி 19, முகமது நவாஸ் 25 ஃபஹீம் அசரப் 14* ரன்கள் அடித்து பாகிஸ்தானின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வங்கதேசம் அதை விட மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 124/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஃபைனலில் இந்தியாவை சாய்ப்போம்:

அதனால் வீட்டுக்கு கிளம்பிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சமீம் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, ஹரிஸ் ரவூப் 3, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இந்த வெற்றியால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் தகுதி பெற்றது.

சொல்லப்போனால் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளது. இந்நிலையில் 49/5 என சரிந்தும் வெற்றி பெற்ற தற்போதைய பாகிஸ்தான் அணி ஸ்பெஷலான திறமைக் கொண்டது என்று கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். இப்போட்டியை போல பவுலிங் செய்தால் இறுதிப் போட்டியில் தங்களால் இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் உறுதி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற போட்டிகளை வென்ற நாங்கள் நிச்சயம் ஸ்பெஷல் அணியாக இருக்க வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடினர். பேட்டிங் துறையில் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் வேலை செய்வோம். ஸ்பெஷல் பிளேயரான ஷாஹீன் அப்ரிடி அணிக்கு தேவைப்பட்டதை செய்தார். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: 41 வருடம் .. இந்தியாவுடன் ஃபைனலில் மோதல்.. வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பி நிகழாததை நிகழ்த்திய பாகிஸ்தான்

“இப்போதும் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். இருப்பினும் நாங்கள் பந்து வீசிய விதத்தை வைத்து அழுத்தத்தை உருவாக்குவோம். குறிப்பாக புதிய பந்தில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்கிறோம். அதற்காக எங்கள் பயிற்சியாளர் ஷேன் கடுமையாக உழைத்து வருகிறார். அவருடன் நாங்கள் எக்ஸ்ட்ரா பயிற்சிகளை எடுத்து வருகிறோம். உங்களால் ஃபீல்டிங் செய்ய முடியாவிட்டால் அணியில் இருக்க முடியாது என்று மைக் ஹெசன் தெரிவித்தார். (ஃபைனல் பற்றி) நாங்கள் செட்டிலாகியுள்ளோம். நாங்கள் எந்த அணியையும் தோற்கடிக்க போதுமானவர்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை கம்பேக் கொடுத்து இறுதிப் போட்டியில் அவர்களை (இந்தியாவை) தோற்கடிப்பதற்காக நாங்கள் உற்சாகத்துடன் உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement