41 வருடம் .. இந்தியாவுடன் ஃபைனலில் மோதல்.. வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பி நிகழாததை நிகழ்த்திய பாகிஸ்தான்

Ind vs ban 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 25ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஃபர்கான் 4, ஜமான் 13, சாய்ம் ஆயுப் 0, கேப்டன் சல்மான் ஆகா 19, ஹுசைன் தாலத் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் 49/5 என ஆரம்பத்திலேயே திணறிய பாகிஸ்தான் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் லோயர் ஆர்டரில் அபாரமாக விளையாடிய முகமது ஹாரிஸ் 31 (23), ஷாஹீன் அப்ரிடி 19 (13), முகமது நவாஸ் 25 (15) ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் பகீம் அசரப் முக்கியமான 14* (9) ரன்கள் எடுத்து கை கொடுத்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:

அதனால் ஓரளவு தப்பிய பாகிஸ்தான் 20 ஓவரில் 135/8 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக டஸ்கின் அகமது 3, மெகதி ஹசன் 2 ரிசாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய வங்கதேச அணியும் ஆரம்பம் முதலே திண்டாட்டமாக பேட்டிங் செய்தது. மறுபுறம் சிறப்பாக பவுலிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் வங்கதேசத்தை 124/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

அதிகபட்சமாக சமீம் ஹொசைன் 30 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, ஹரிஸ் ரவூப் 3, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதனால் வங்கதேசத்தை இத்தொடரிலிருந்து வீட்டுக்கு அனுப்பிய பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

41 வருடங்களில் முதல் முறையாக:

சொல்லப்போனால் ஆசியக் கோப்பை கடந்த 1984 முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 41 வருடங்களில் இதுவரை 17 முறை ஆசியக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த 17 தொடர்களில் ஒருமுறை கூட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிகள் மோதியது இல்லை. ஆனால் தற்போது இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் வரலாற்றில் நிகழாததை நிகழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: காயத்தை மறைக்கவே பும்ராவை கேப்டன் சூர்யா இப்படி யூஸ் பன்றாரு.. ஃகைப் குற்றசாட்டை விளாசிய பும்ரா

அத்துடன் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஷாகின் அப்ரிடி ஏற்கனவே தெரிவித்துள்ளார். மறுபுறம் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் இறுதிப் போட்டியில் தோற்கடித்து கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது.

Advertisement