வீடியோ : வேணும்னே தோத்திங்க, இந்திய அணியின் மீது கோபத்தை நேரடியாக வெளிப்படுத்திய – பாக் வீரர்

David Miller Hardik Pandya IND vs SA
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்த இந்தியா 3வது போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அக்டோபர் 30ஆம் தேதியன்று புகழ்பெற்ற பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் 133/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோஹித் 15, ராகுல் 9, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹார்டிக் பாண்டியா 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா 100 ரன்களைத் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மானத்தை காப்பாற்றும் வகையில் வேறு ஏதோ பிட்சில் விளையாடுவது போல அட்டகாசமாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். ஆனால் அவருடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை அதிரடியை துவக்காமல் மெதுவாக விளையாடி 6 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

- Advertisement -

வேணும்னே தோத்திங்க:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்காவின் சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 134 ரன்களை துரத்திய அந்த அணிக்கு குயின்டன் டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 24/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஐடன் மார்க்ரம் 52 (41) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய டேவிட் மில்லர் 59* (46) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார். அதனால் வென்ற தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளை பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மறுபுறம் பந்து வீச்சில் கடைசி வரை போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய இந்தியா இந்த உலகக் கோப்பையில் முதல் தோல்வியை சந்தித்து 4 வது இடத்தில் நீடிக்கிறது. இதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த தோல்வி தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்து 5வது இடத்தில் திண்டாடும் பாகிஸ்தானின் அரையிறுதி கனவை 90% தகர்த்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் இந்தியாவிடம் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்ற அந்த அணி 2வது போட்டியில் ஜிம்பாப்வேவிடம் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனால் தன்னுடைய எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தை சந்தித்த பாகிஸ்தானுக்கு இந்தியா அதனுடைய எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய தயவும் தேவைப்பட்டது. அந்த நிலையில் அதே பெர்த் மைதானத்தில் நெதர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் இந்தியாவின் வெற்றிக்காக காத்திருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருந்தும் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சொதப்பியதாக தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சலித்துக் கொள்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் 4 விக்கெட்டுகள் இழந்ததுமே நம்பிக்கையை இழந்து வேண்டுமென்றே தோற்பதற்காக விளையாடுகிறீர்கள் என்ற வகையில் ட்விட்டரில் ஆதங்கத்துடன் பேசியது பின்வருமாறு. “இந்தியா வெல்ல வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்கள் இங்கே பாகிஸ்தானின் வாய்ப்புகளை கொன்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு அது தேவையில்லை. ஏற்கனவே 4 விக்கெட்டுகள் விழுந்து விட்டது. இப்போட்டியில் என்ன நடக்கும் என்று தெரியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : அப்போ 2011 போலவே கப் எங்களுக்கு தான், தோல்விக்கு பின் சேவாக் உட்பட அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சி – காரணம் இதோ

முன்னதாக கடந்த 2019 உலகக் கோப்பையிலும் இதே நிலைமையிலிருந்த பாகிஸ்தான் இங்கிலாந்துக்காக எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்திருந்தது. ஆனால் அப்போட்டியில் இங்கிலாந்திடம் இதே போல இந்தியா தோற்றதால் பாகிஸ்தான் வெளியேறியதை சுட்டிக்காட்டும் அந்நாட்டு ரசிகர்கள் எப்போதுமே நீங்கள் எங்களை காப்பாற்று வகையில் செயல்படுவதில்லை என்று சமூக வலைதளங்களில் சலித்துக் கொள்கிறார்கள்.

Advertisement