அப்போ 2011 போலவே கப் எங்களுக்கு தான், தோல்விக்கு பின் சேவாக் உட்பட அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சி – காரணம் இதோ

IND vs SA VIrat Kohli Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 2 கிரிக்கெட் போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து மிரட்டியது. அதை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியன்று தன்னுடைய 3வது போட்டியில் வென்றால் நாக் அவுட் சுற்று வாய்ப்பு உறுதியாகி விடும் என்ற நிலைமையில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 15, ராகுல் 9, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹர்டிக் பாண்டியா 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த சூரியகுமார் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குவித்து காப்பாற்றினார். ஆனால் கடைசி வரை அதிரடியை துவக்காத தினேஷ் கார்த்திக் 6 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகடி 4 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

வெற்றி நமதே:
அதை தொடர்ந்து 134 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு குயின் டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 24/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியான போது 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ஐடன் மார்க்கம் 52 (41) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார். ஆனால் அவருடன் விளையாடிய டேவிட் மில்லர் கடைசி வரை அவுட்டாகாமல் 59* (46) ரன்கள் குவித்து பினிஷிங் செய்து இந்தியாவை சாய்த்தார்.

இந்த வெற்றியால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய இந்தியா இந்த தோல்வியால் எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்தும் ஓப்பனிங் மற்றும் பினிஷிங் சரியில்லாத சுமாரான பேட்டிங்கை ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

1. அதே சமயம் இந்த தோல்வியால் பெரும்பாலான ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் தொடர் வெற்றி நடை போட்டால் அணியின் பலம் பலவீனம் தெரியாமல் போய்விடும் என்பதுடன் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே தோற்ற இந்தியா எஞ்சிய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது.

2. அந்த போட்டியில் இடதுகை பேட்ஸ்மேன் ராபின் பீட்டர்சன் பினிசிங் செய்தது போல இப்போட்டியில் இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் பினிஷிங் செய்தார். இதையே தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டும் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தென்னாப்பிரிக்காவை பாராட்டி 2011 உலகக் கோப்பை போலவே 133 ரன்கள் வெற்றிக்கு உதவவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் 2011இல் குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பின் கோப்பையை வென்றதைப் போலவே இம்முறையும் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

3. அத்துடன் 2011 உலகக்கோப்பையில் வலுவான இங்கிலாந்தை கத்துக்குட்டி அயர்லாந்து வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்தது போலவே இம்முறையும் டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை அயர்லாந்து தோற்கடித்துள்ளது.

4. மேலும் 2011இல் பிரபல ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்டது போல மீண்டும் அதனுடைய புதிய தயாரிப்பு இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என சமீபத்தில் முன்னாள் கேப்டன் தோனி கூறியதையும் இந்த விஷயத்தில் ரசிகர்கள் இணைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement