ஆசிய கோப்பை 2023 : எல்லாம் ஓகே ஆனா தாக்கூருக்கு பதிலா அந்த சிஎஸ்கே ஆல் ரவுண்டர சேத்துருக்கலாம் – கம்பீர் வித்தியாச கருத்து

Gautam gambhir
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரை பயன்படுத்தி அனைத்து நாடுகளும் தங்களுடைய உலகக் கோப்பை அணியில் விளையாடப் போகும் இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய தயாராகியுள்ளன. அந்த வகையில் 7 கோப்பைகளை வென்று ஆசிய கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் இந்தியா ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

Rohit Sharma India

- Advertisement -

அதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதே போல இந்த அணியில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

கம்பீர் கருத்து:
அது போக முதன்மை மணிக்கட்டு ஸ்பின்னரான கருதப்படும் யுஸ்வேந்திர சஹால் கழற்றி விடப்பட்டுள்ளதும் சில ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து குறைகளையும் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கும் கௌதம் கம்பீர் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் சர்துள் தாக்கூர் பேக்-அப் வீரராக இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். எனவே இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து டி20 தொடரிலும் அசத்தி வரும் சிவம் துபே தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என அவர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

Shivam-Dube

அதே போல ரவி பிஷ்னோய் அல்லது சஹால் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னர் ஒருவராவது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு மணிக்கட்டு ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் எடையை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம்”

- Advertisement -

“ஏனெனில் இந்திய கால சூழ்நிலைகளில் 2 மணிக்கட்டு ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது அவசியமாகும். ஆனால் தற்போது 2 இடது கை ஸ்பின்னர்கள், 1 மணிக்கட்டு ஸ்பின்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அதனால் அதிக எடை கொண்ட வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள இந்த அணியின் பவுலிங் அட்டாக் ஒருதலைபட்சமாக இருக்கிறது. அதன் காரணமாக இதில் ஒரு லெக் ஸ்பின்னரை வெளியே எடுத்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் ஃபார்முக்கு நீங்கள் முகமது ஷமியை கழற்றி விட்டு ஏதேனும் ஒரு மணிக்கட்டு ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம்”

Gambhir

“அதே போல சிவம் துபே இருக்கும் ஃபார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஷார்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது” என்று கூறினார். முன்னதாக 2019இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சிவம் துபே டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டதால் அறிமுகப் போட்டிக்கு பின் வாய்ப்பே பெறவில்லை.

இதையும் படிங்க:2023 உ.கோ : களம் வேற மாதிரி இருக்கும், நானும் விராட் கோலியும் அதை செய்ய போறோம் – ரோஹித் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ள அவர் ஒருநாள் அணிகளுக்கான திட்டத்தில் இல்லாமல் இருக்கிறார். ஆனாலும் இப்போதுள்ள ஃபார்முக்கு தாக்கூரை விட அவர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று கம்பீர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement