2023 உ.கோ : களம் வேற மாதிரி இருக்கும், நானும் விராட் கோலியும் அதை செய்ய போறோம் – ரோஹித் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Rohit Sharma Virat kohli
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் அடுத்த சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கப்போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அனியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு வெள்ளோட்டமாகவும் தயாராகும் வகையிலும் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Asia-Cup

- Advertisement -

அதில் சமீப காலங்களாக நிலவிய சில குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. முதலில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாடி வரும் பும்ராவுடன் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் குணமடைந்துள்ளதால் ஆசிய கோப்பையில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக விக்கெட் கீப்பர் மற்றும் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தேவையான வீரர்களின் பிரச்சனை தீர்ந்துள்ளது. அதே போல 2011 உலக கோப்பையில் சுரேஷ் ரெய்னா, கெளதம் கம்பீர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை 6 பேருமே வலது கை வீரர்களாக இருக்கின்றனர்.

ரோஹித்தின் அறிவிப்பு:
அந்த பின்னடைவையும் சரி செய்ய ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அறிமுகமாகாவிட்டாலும் பரவாயில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அசத்திய திலக் வர்மாவாயு ஆசிய கோப்பையில் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. இப்படி ஓட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கப்பட்டாலும் 2011 உலகக்கோப்பையில் சச்சின், யுவராஜ், ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறிய போது பகுதி நேர பந்து வீச்சாளர்களாக மாறி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர்.

sachin

ஆனால் தற்போதைய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாருமே பகுதி நேர பவுலர்கள்ளாக இல்லாத ஒரே ஒரு குறை மட்டும் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் அது போன்ற பகுதி நேர பவுலர்களை ஒரே நாள் இரவில் உருவாக்கி விட முடியாது என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா இந்த பிரச்சனையை 2023 உலக கோப்பையில் தாமும் விராட் கோலியும் பந்து வீசி சரி செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது பற்றி ஆசியக் கோப்பை அணி அறிவிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது 2011இல் இருந்த சிறப்பான அணியாகும். அந்த அணியில் பேட்டிங் செய்யும் வீரர்கள் பவுலிங் செய்பவர்களாகவும் இருந்தனர். அந்த வகையில் தற்போதைய அணியில் இருப்பவர்களில் யாரையாவது அப்படி நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும். குறிப்பாக இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டவர்களில் நாங்கள் அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும். ஆனால் அது போன்ற பந்து வீசும் பேட்ஸ்மேன்களை ஒரே நாள் இரவில் நம்மால் உருவாக்கி விட முடியாது”

Rohit-and-Kohli

“மேலும் தற்போது அணியில் பேட்ஸ்மேன்களாக இருப்பவர்கள் பெரிய ரன்களை குவித்துள்ள காரணத்தாலேயே இடம் பிடித்துள்ளார்கள். எனவே இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கைகளை சுழற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என சிரித்துக் கொண்டே கூறினார். அப்போது அருகிலிருந்த அஜித் அகர்கர் “அதை செய்வதற்கு நாங்களும் அவர்களை சம்மதிக்க வைப்போம்” என்று கலகலப்புடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சுதந்திர தினத்தில் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றது ஏன்? சாக்சி வெளியிட்ட நெகிழ்ச்சியான பின்னணி இதோ

அதாவது பேட்ஸ்மேன்களாக இருப்பவர்கள் திடீரென பந்து வீச முடியாது என்பதால் இதற்கு முன் அனுபவம் கொண்டவர்களே இந்த வேலையை செய்ய முடியும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். அந்த வகையில் ஆரம்பக் காலங்களில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மாவும் டி20 உலகக்கோப்பை செமி ஃபைனலில் கடைசியாக (2016இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக) விக்கெட்டை எடுத்த இந்திய பவுலராக திகழும் விராட் கோலியும் மட்டுமே தற்போதைய பேட்டிங் வரிசையில் ஓரளவு பவுலிங் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். எனவே இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அந்த வேலையை செய்ய தயார் என்று ரோகித் சர்மா அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement