சுதந்திர தினத்தில் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றது ஏன்? சாக்சி வெளியிட்ட நெகிழ்ச்சியான பின்னணி இதோ

Sakshi
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச் சிறந்த இந்திய வீரர்களில் ஒருவராக அனைவரும் போற்றப்படுகிறார். ஏனெனில் கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்த அவர் கடந்த 2004ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதில் முதல் போட்டியிலே கோல்டன் டக் அவுட்டானாலும் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடிய அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமின்றி பெரிய ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கு இலக்கணமாக திகழ்ந்தார்.

Dhoni world cup

- Advertisement -

மேலும் பார்க்காமலே ரன் அவுட் செய்வது, கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு இன்ச் காலை தூக்கினால் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்வது என விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் அனுபவுமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் 2007 டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தார். அதே போல 2010இல் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக அவரது தலைமையில் உச்சத்தை தொட்ட இந்தியா 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களுடன் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

சுதந்திர நாளில் ஓய்வு:
அதே போல் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தாம் உருவாக்கிய வீரர்களை வைத்து வென்ற அவர் 3 விதமான வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்து இப்போதைய இந்திய அணி வளமாக இருப்பதற்கு அப்போதே ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார். மேலும் அழுத்தமான மிடில் ஆர்டரில் பல போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான ஃபினிஷராகவும் போற்றப்படும் அவர் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் கடைசியாக விளையாடி 2020இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

dhoni-retire

குறிப்பாக சச்சினுக்கு நிகரான தரத்தையும் மதிப்பையும் கொண்டிருந்ததால் மிகப்பெரிய வழியனுப்பு போட்டியில் ரசிகர்களுக்கு முன்னிலையில் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தில் இரவு 7.29 மணிக்கு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது யாராலும் மறக்க முடியாததாக அமைந்தது. பொதுவாகவே தனித்துவமான வித்தியாச முடிவுகளை எடுக்கக்கூடிய தோனி அப்படி ஓய்வு முடிவை அறிவித்தது அவருடைய பலகோடி ரசிகர்களின் நெஞ்சங்களையும் உடைத்தது.

- Advertisement -

2015 உலகக்கோப்பையில் தம்முடைய குழந்தை பிறந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பாமல் நாட்டுக்காக தொடர்ந்து விளையாடிய தோனி தமக்கு இந்திய அரசின் விருது கிடைத்த போது அதை ராணுவ உடையில் சென்று குடியரசு தலைவருக்கு சல்யூட் அடித்து வாங்கினார். அத்துடன் இந்திய ராணுவத்தில் கொடுக்கப்பட்ட உயரிய பதவியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாட்டுக்காக பங்காற்றி வந்த அவர் தேசப்பற்றின் காரணமாகவே சுதந்திர தினத்தில் ஓய்வு முடிவை அறிவித்திருப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் நாடு சுதந்திரமடைந்த தினமும் தம்முடைய அம்மா தேவகி தேவி அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பதாலேயே அந்த நாளில் தோனி ஓய்வு முடிவை அறிவித்ததாக அவருடைய மனைவி சாக்சி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் கூறியது பின்வருமாறு. “அது அவருடைய அம்மாவின் பிறந்த நாளாகும். என்னுடைய மாமியாரை நான் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக தான் சந்தித்தேன். ஆனால் இன்று எங்களுடைய நண்பர்களை போல் நல்ல பிணைப்பு இருக்கிறது”

இதையும் படிங்க:IND vs IRE : ரெண்டாவது மேட்ச்ல நாம ஜெயிக்க அந்த 2 ஓவர்தான் காரணமே – அப்படிதான் ஆடனும்

“நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். முன்பெல்லாம் தோனி விளையாடுவதற்காக வெளியில் இருந்த போது எனக்கு அவர்கள் அந்நியர்களாக தெரிந்தனர். ஆனால் தற்போது எங்களுடைய நல்ல உறவு வளர்ந்துள்ளது. தற்போது எனக்கு அவர்கள் தான் பெரிய ஆதரவாக இருக்கிறார். இப்போது அவரின் அம்மாவுடன் ஒரே வீட்டில் இல்லாமல் இருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement