ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் முன்னதாக சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு – விவரம் இதோ

Dube
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐபிஎல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் தற்போது அனைத்து ஐ.பி.எல் அணிகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சிஎஸ்கே அணிக்கு தோனி தலைமை தாங்க இருக்கும் வேளையில் அவருக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. எனவே இம்முறையும் கோப்பையை வென்று அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக ஏற்கனவே இருந்த அணியுடன் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் மினி ஏலத்திலும் சில புதிய இளம் வீரர்களையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பார்க்கப்படும் ஷிவம் துபேவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தற்போது மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் சிவம் துபே பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு சதங்களை அடித்து மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் வேளையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அவருக்கு தசைப் பிடிப்பும் ஏற்பட்டுள்ளதால் இந்த காயம் குணமடைய சில மாதங்கள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒருவேளை சிஎஸ்கே அணியிலிருந்து ஷிவம் துபே விலகினால் அவரது இடத்தை நிரப்ப வேண்டிய வீரரை அந்த அணி தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. அதுவும் ஒரு ஸ்பெஷல் பதவியோட – விவரம் இதோ

கடந்த சில சீசன்களாகவே சிஎஸ்கே அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே அண்மையில் இந்திய அணிக்காகவும் கம்பேக் கொடுத்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement