மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. அதுவும் ஒரு ஸ்பெஷல் பதவியோட – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த 15 மாதங்களாகவே எவ்வித போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதோடு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.

இந்நிலையில் காயத்திலிருந்து படிப்படியாக குணமடைந்து வரும் ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இந்நிலையில் எதிர்பார்த்த படியே ரிஷப் பண்ட் விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

அந்தவகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் பங்கேற்பது உறுதியாகி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வரும் ரிஷப் பண்ட் தற்போது முழுவீச்சில் பேட்டிங் செய்து வருகிறார்.

தற்போது ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடியுள்ள அவர் பேட்டிங் செய்யும் போது எந்த ஒரு தொந்தரவையும் அவர் எதிர்கொள்ளாததால் நிச்சயம் ஐபிஎல் தொடரில் அவர் ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு விக்கெட் கீப்பிங் பணியை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு அவர் முழுநேர பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் டெல்லி அணியை வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அதோடு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் அவரின் கேப்டன்ஷிப் மீதான நம்பிக்கையையும் அதிகமாக வைத்துள்ளதால் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு பழையபடி ரிஷப் பண்ட் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கில்கிறிஸ்ட், ஹெய்டன் பத்தி தெரியுமா? இந்திய வீரர் பற்றிய இங்கிலாந்து வீரரின் கருத்துக்கு.. மைக்கேல் கிளார்க் பதிலடி

இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெறயிருக்கும் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் தேர்வாக வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement