தோனி, ரெய்னா போன்ற அந்த ஜாம்பவான்களையும் மிஞ்சும் துபே.. சிஎஸ்கே அணிக்காக சரவெடி சாதனை

Shivam Dube
- Advertisement -

ஐபிஎல் 2022 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் லக்னோவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்தது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அதை துரத்திய லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124* ரன்களை விளாசி கடைசி ஓவரில் அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சரவெடி துபே:
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் ஒருபுறம் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் எதிர்ப்புறம் ரகானே, ஜடேஜா, டேரில் மிட்சேல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவு ஏற்படுத்தினர். அதனால் சென்னை 180 ரன்கள் தொடுவதே கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது களமிறங்கிய சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் பேட்டிங் செய்து சென்னையை அதிரடி பாதைக்கு கொண்டு வந்தார். குறிப்பாக யாஸ் தாகூர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் தோனி பாராட்டும் அளவுக்கு மொத்தம் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 66 (27) ரன்களை 244.44 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சென்னை 210 ரன்கள் அடிப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மேலும் இப்போட்டியில் அடித்த 66 ரன்களையும் சேர்த்து சென்னை அணிக்காக சிவம் துபே 1000 ரன்கள் கடந்துள்ளார். குறிப்பாக இதுவரை 33 இன்னிங்ஸில் அவர் சென்னை அணிக்காக 1018 ரன்களை 161.08 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக குறைந்தது 1000 ரன்கள் அடித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர் என்ற சாதனையை சிவம் துபேவை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் பாய் ப்ளீஸ் இவரை 2024 டி20 உலகக் கோப்பைக்கு செலக்ட் பண்ணுங்க.. ரெய்னா கோரிக்கை

இதுவரை சிஎஸ்கே அணிக்காக தோனி, சுரேஷ் ரெய்னா, மைக் ஹசி, முரளி விஜய் போன்ற 13 வீரர்கள் 1000 ரன்கள் அடித்துள்ளனர். ஆனால் அவர்களில் சிவம் துபே மட்டுமே 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 1000 ரன்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். அந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக தோனி (138.98), ரெய்னா (138.91) உள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் சரவெடியாக விளையாடும் துபேவை 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement