ஒரே போட்டியில் 5 முக்கிய மாஸான சாதனைகளை நிகழ்த்திய உத்தப்பா, ஷிவம் துபே ஜோடி – லிஸ்ட் இதோ

Shivam Dube Robin Uthappa
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. நவிமும்பையில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் 17 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அடுத்து வந்த மொயீன் அலி 3 (8) ரன்களில் நடையை கட்டியதால் 36/2 என தடுமாறிய சென்னைக்கு 5-வது தோல்வி உறுதி என அந்த அணி ரசிகர்கள் சோகம் அடைந்தனர். ஆனால் அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே மற்றொரு அனுபவ தொடக்க வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து பொறுப்புடன் தனது அணியை மீட்டெடுக்க போராடினார்.

RCB vs CSK Ruturaj

பொறுமையாக பேட்டிங் செய்த இந்த ஜோடி விக்கெட்டுகள் சரிவதை தடுத்து நிறுத்தி ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆரம்பத்தில் நிதானத்தை கடைபிடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவிக்கும் எண்ணத்தில் பெங்களூர் பவுலர்களை சரமாரியாக அடிக்க தொடங்கியது.

- Advertisement -

தூக்கி நிறுத்திய உத்தப்பா – துபே:
ஆரம்பத்தில் அம்பியாக இருந்த இவர்கள் அதன்பின் அந்நியனாக உருமாறி பெங்களூர் பவுலர்களை புரட்டி எடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டனர். குறிப்பாக இவர்களின் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 62/2 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை அடுத்த 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடி 156/2 ரன்களை நொறுக்கியது. அதிலும் கடைசி 50 ரன்கள் வெறும் 14 பந்துகளில் வந்தது.

Shuvam Dube Robin Uthappa

அந்த அளவுக்கு தொடர்ந்து பட்டைய கிளப்பிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் விளாசி 36/2 என மூழ்கிய சென்னையை நங்கூரமாக நின்று தூக்கி நிறுத்தியது. 3-வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 19-வது ஓவர் வரை ரன்மழை பொழிந்து சென்னையை காப்பாற்றிய போது 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ச்ர்கள் உட்பட 88 ரன்கள் எடுத்திருந்த ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமாக விளையாடிய சிவம் துபே கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலைமையில் சிங்கிள் மட்டும் எடுத்தாலும் 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 95* ரன்கள் எடுத்தார். இவர்களின் அதிரடியால் தப்பிய சென்னை 20 ஓவர்களில் 216/4 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சென்னை முதல் வெற்றி:
அதை தொடர்ந்து 217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளேஸிஸ் 8 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். போதாக்குறைக்கு சென்னையின் அதிரடியான பந்துவீச்சில் அனுஜ் ராவத் 12 (16) ரன்களிலும் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 26 (11) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 50/4 என ஆரம்பத்திலேயே பெங்களூரு தடுமாறியது.

Makesh Theeksana

இருப்பினும் நடுவரிசையில் களமிறங்கிய இளம் வீரர்கள் பிரபு தேசாய் அதிரடியாக 34 (18) ரன்களும் சபாஸ் அஹமட் 41 (27) ரன்களும் விளாசி ஆட்டமிழந்ததார்கள். கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்து சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்த போதிலும் முக்கியமான நேரத்தில் அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் 193/9 ரன்களை மட்டுமே பெங்களூரு எடுத்தது.

- Advertisement -

இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை இந்த வருடத்தில் 4 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 10-வது இடத்திலிருந்து மீண்டெழுந்து 9-வது இடத்தைப் பிடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது. சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

CSK vs RCB 2

சாதனை ஜோடி:
1. இந்த போட்டியில் வெறும் 80 பந்துகளில் 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை காப்பாற்றிய சிவம் துபே – ராபின் உத்தப்பா ஜோடி ஐபிஎல் வரலாற்றில் 3-வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது. இதற்குமுன் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக சங்கக்காரா – கேமரூன் வைட் ஆகியோர் புனே அணிக்கு எதிராக 2012-ஆம் ஆண்டு 157 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

- Advertisement -

2. இத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த சென்னை ஜோடி என்ற புதிய சாதனையையும் இவர்கள் படைத்தனர். இதற்குமுன் கடந்த 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக முரளி விஜய் – மைக் ஹசி 159 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

3. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னைக்காக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர். ஷேன் வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோர் 2020இல் பஞ்சாப்க்கு எதிராக 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் உள்ளனர்.

4. இத்துடன் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை அவர்களும், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி (216/4) என்ற பெருமையை சென்னையும் பெற்றது.

இதையும் படிங்க : ஒரு மேட்ச்ல தான் அவர் இல்ல, அதற்குள் இப்படி ஒரு நிலைமையா ! புலம்பும் ஆர்சிபி கேப்டன், ரசிகர்கள்

5. மேலும் இந்த போட்டியில் 88 ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். அதேபோல் 95* ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற சிவம் துபே ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

Advertisement