ஒரு மேட்ச்ல தான் அவர் இல்ல, அதற்குள் இப்படி ஒரு நிலைமையா ! புலம்பும் ஆர்சிபி கேப்டன், ரசிகர்கள்

Faf
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற 22-ஆவது லீக் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தொடர் தோல்விகளுக்கு பின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 216/4 ரன்களை குவித்தது. ஒரு கட்டத்தில் 36/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் மீட்டெடுக்க போராடினார்கள்.

ஆரம்பத்தில் நிதானத்துடன் செயல்பட்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பெங்களூர் பவுலர்களை புரட்டி எடுத்து பவுண்டரிகளை விட அதிக சிக்சர்களை பறக்க விட்டது. தொடர்ந்து பட்டைய கிளப்பிய இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த போதிலும் அவுட்டாகமல் அடம் பிடித்து 3-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருவழியாக 19-வது ஓவரில் பிரிந்தனர்.

- Advertisement -

சென்னை மாஸ் பவுலிங்:
பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இந்த ஜோடியில் 5 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின் உத்தப்பா அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய சிவம் துபே கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 46 பந்துகளில் 95* ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக ஆரம்பம் முதலே அற்புதமாக பந்துவீசிய சென்னை பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தனர்.

குறிப்பாக தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளசிஸ் 8 (9), அனுஜ் ராவத் 12 (16), விராட் கோலி 12 (16) என டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 26 (11) ரன்கள் குவித்து அவுட்டாகி ஏமாற்றியதால் 50/4 என தடுமாறிய பெங்களூருவின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது. இருப்பினும் நடு வரிசையில் களமிறங்கிய இளம் வீரர்கள் சபாஷ் அஹமத் 41 (27), பிரபு தேசாய் 34 (18) என அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்த போதிலும் சென்னையின் தரமான பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

பெங்களூரு 2-வது தோல்வி:
கடைசியில் வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் 34 ரன்களில் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 193/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த தோல்வியால் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் அதன்பின் அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வந்த பெங்களூரு 2-வது தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் இப்போதும் 5-வது இடத்தில் நல்ல நிலைமையில் உள்ளது.

- Advertisement -

ஹர்ஷல் படேல் மிஸ்:
முன்னதாக இப்போட்டியில் பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது தங்கை இறந்து விட்டதால் வீட்டிற்கு சென்றுள்ள காரணத்தால் பங்கேற்கவில்லை. அதே காரணத்துக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் இதர பெங்களூரு வீரர்கள் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள். ஆனால் அவர் இல்லாத குறை நேற்றைய போட்டியில் பெங்களூருவின் பந்துவீச்சில் வெகுவாக எதிரொலித்தது. ஏனெனில் 36/2 என பவர்பிளே ஓவர்களில் அசத்திய பெங்களூரு பவுலர்கள் அதன்பின் ரன்களை வாரி இறைத்தனர்.

போதாக்குறைக்கு சிவம் துபே மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்க அதற்கு சரணடைந்த பெங்களூர் பவுலர்களில் ஹர்ஷல் படேலுக்கு பதிலாக விளையாடிய ஆகாஷ் தீப் 4 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக அவர் வீசிய 4-வது ஓவரில் ஹாட்ரிக் வைட் உட்பட தாறுமாறாக 23 ரன்களை வழங்கியது தான் கடைசியில் பெங்களூருவின் 23 ரன்கள் வித்தியாசத்திலான தோல்விக்கு பங்காற்றியது என்றே கூறலாம்.

- Advertisement -

அத்துடன் முதல் 10 ஓவர்களில் 60/2 ரன்களை மட்டுமே கொடுத்த பெங்களூரு கடைசி கட்ட ஓவர்களில் அபாரமாக பந்துவீசும் திறமை பெற்ற ஹர்ஷல் படேல் இல்லாததால் 156/2 ரன்களை வாரி வழங்கியது. இதுபற்றி போட்டி முடிந்த பின் கேப்டன் டு பிளசிஸ் பேசியது பின்வருமாறு. “இதுபோன்ற போட்டியில் தான் ஹர்ஷல் படேல் மதிப்பை உணர முடிகிறது” என கூறினார். ஏனெனில் கடந்த வருடம் அபாரமாக பந்துவீசிய அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்து அதற்காக வழங்கப்படும் ஊதா தொப்பியையும் வென்றதுடன் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

இதையும் படிங்க : வீடியோ : 2022 ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச்சை பிடித்த சிஎஸ்கே வீரர்! குவியும் பாராட்டு – என்ன ஒரு அட்டகாசமான கேட்ச்

இந்த வருடமும் கூட மிகத் துல்லியமாக பந்துவீசி பெங்களூருவின் வெற்றியில் பங்காற்றி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தங்கையின் சடங்கை முடித்து பெங்களூர் அணிக்கு திரும்பியுள்ள அவர் அடுத்த போட்டியில் களமிறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement