2022 ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச்சை பிடித்த சிஎஸ்கே வீரர்! குவியும் பாராட்டு – என்ன ஒரு அட்டகாசமான கேட்ச்

Ambati rayudu Catch
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 12-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் டு பிளேஸிஸ் தலைமையிலான பெங்களூருவை பதம்பார்த்த ஜடேஜா தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அதிரடியான வெற்றியால் தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி 2 பொன்னான புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மறுபுறம் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 3 வெற்றிகளைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது.

நவிமும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 216/4 ரன்களை விளாசியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 36/2 என தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த இளம் வீரர் ஷிவம் துபே ராபின் உத்தப்பாவுடன் கைகோர்த்து நிதானமாக தனது அணியை மீட்டெடுக்க போராடினார்.

- Advertisement -

சொதப்பிய பெங்களூரு:
நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய இந்த ஜோடி பவுண்டரிகளை விட அதிக சிக்சர்களை பறக்க விட்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்னும் அவுட்டாகாமல் பெங்களூர் பவுலர்களை புரட்டி எடுத்தது. குறிப்பாக கடைசி 10 ஓவர்களுக்கு பின் பவுண்டரிகளை விட அதிக ரசிகர்களை பறக்க விட்டு 3-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்சர் உட்பட 88 ரன்கள் எடுத்து ராபின் உத்தப்பா அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து பட்டையை கிளப்பிய சிவம் துபே கடைசி வரை அவுட்டாகாமல் 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 95* ரன்கள் விளாசினார்.

இதனால் முதல் 10 ஓவர்களில் 60/2 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை அடுத்த 10 ஓவர்களில் ருத்ர தாண்டவமாடி 156/2 ரன்களை நொறுக்கியது. அதைத் தொடர்ந்து 217 என்ற பெரிய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 8 (9), அனுஜ் ராவத் 12 (16), விராட் கோலி 1 (3) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சொதப்பினார்கள். போதாகுறைக்கு அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 26 (11) ரன்களில் நடையை கட்டியதால் 50/4 என தடுமாறிய பெங்களூருவின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

அசத்தல் சென்னை:
இருப்பினும் நடுவரிசையில் களமிறங்கிய இளம் வீரர்கள் சபாஷ் அகமது வெறும் 27 பந்துகளில் 41 ரன்களும் பிரபு தேசாய் வெறும் 18 பந்துகளில் 35 ரன்களும் அதிரடியாக எடுத்து நம்பிக்கை கொடுத்த போதிலும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 193/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு போராடி தோல்வி அடைந்தது.

சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த வெற்றியில் 95* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சென்னை தனது முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

சூப்பர்மேன் ராயுடு:
அதிலும் நேற்று இரவு நேர போட்டியில் பனியிம் தாக்கம் இருந்த நிலையில் பெங்களூர் வீரர்கள் ஒருசில முக்கிய கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் சென்னை வீரர்கள் அபாரமாக செயல்பட்டு முக்கியமான கேட்ச்களை அற்புதமாக பிடித்தார்கள். குறிப்பாக 146/7 என தவித்த பெங்களூருவின் தோல்வி உறுதியான வேளையில் களமிறங்கிய இளம் வீரர் ஆகாஷ் தீப் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை லேசாக தட்டிய நிலையில் அது கவர் பீல்டிங் உள்வட்ட பகுதியில் நின்று கொண்டிருந்த அம்பத்தி ராயுடுவின் பக்கம் சென்றது.

அந்த பந்து தனது கைக்கு எட்டாத நிலையில் வந்தபோதும் அதற்காக பின் வாங்காத ராயுடு அப்படியே சூப்பர் மேனை போல ஒருசில நொடிகள் காற்றில் பறந்து தாவிப் பிடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது. குறிப்பாக இந்தக் கேட்ச்தான் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேட்ச் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : பேட்டிங்கில் அந்த ஒரு விடயம், பவுலிங்கில் இந்த ஒரு விடயம் – சி.எஸ்.கே-வின் முதல் வெற்றிக்கு இதுதான் காரணம்

இதை பார்த்த ஒருசில ரசிகர்கள் தற்போது 36 வயதாகும் அவருக்கு இன்னும் வயதாகவில்லை என்பதுபோல் பாராட்டி வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement