பேட்டிங்கில் அந்த ஒரு விடயம், பவுலிங்கில் இந்த ஒரு விடயம் – சி.எஸ்.கே-வின் முதல் வெற்றிக்கு இதுதான் காரணம்

csk
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்த வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது 5-வது லீக் ஆட்டத்தில் நேற்று பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த 216 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆர்சிபி அணி 193 ரன்களை மட்டுமே அடித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.

Shivam Dube Robin Uthappa

- Advertisement -

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை அணி எவ்வாறு இந்த தோல்வியின் பிடியில் இருந்து மீண்டது? இந்த போட்டியில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்? என்பதற்கான சில காரணங்களை தான் இங்கு பார்க்க உள்ளோம். அதன்படி நேற்று பேட்டிங்கை பொறுத்தவரையில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர் வரை நல்லநிலையில் இல்லை என்றாலும் இரண்டாவது பாதியில் மிகப்பிரமாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்று கூறலாம்.

ஏனெனில் முதல் 10 ஓவர்களில் வெறும் 60 ரன்களை மட்டுமே குவித்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி அடுத்ததாக 10 ஓவர்களில் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதனை சரியாக உணர்ந்த துவக்க வீரர் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பெங்களூரு பவுலர்களை சிறப்பாக கையாண்டனர். குறிப்பாக 11-வது ஓவரில் இருந்து 20-வது ஒருவரை ஒரு ஓவரில் கூட 10-ரன்களுக்கு குறைவாக அடிக்கவில்லை.

Virat Kohli vs CSK

சென்னை அணி விளையாடிய கடைசி 10 ஓவர்களில் 156 ரன்கள் விளாசப்பட்டது. அதாவது சராசரியாக ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டு இருந்தது. இப்படி இரண்டாம் பாதியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் நல்ல ஸ்கோரை சென்னை அணியானது இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

அதேபோன்று பந்து வீச்சிலும் நேற்று சிறப்பாக செயல்பட்டு சிஎஸ்கே அணி பவர்ப்ளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளில் எல்லாம் சேர்த்து 2 விக்கெட்டுகளை மட்டுமே பவர்பிளே ஓவர்களில் வீழ்த்தியிருந்த நிலையில் நேற்றைய பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூரு அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளியதால் அவர்களால் கடினமாக போராட முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : விராட் கோலியை மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய தல தோனி – நம்ம ஆளு ஸ்கெட்ச் மிஸ் ஆகாது

இப்படி பேட்டிங், பவுலிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற உத்திகளை கடைபிடித்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement