ரஞ்சி போட்டியில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர் வேறலெவலில் சம்பவம் செய்த ஷிவம் துபே – இறுதிநேரத்தில் அபாரம்

Shivam-Dube
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நான்காவது சுற்று போட்டிகளில் நாகாலாந்து, தமிழ்நாடு, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ள வேளையில் மும்பை அணி தங்களது 4-ஆவது வெற்றிக்காக வெற்றிக்காக போராடி வருகிறது.

இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்து வரும் மும்பை அணியானது தற்போது உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக இக்கட்டான நிலையில் வெற்றிக்காக போராடி வருகிறது. இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி தங்களது முதல் இன்னிங்சில் 198 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய உத்தர பிரதேச அடியின் நட்சத்திர வீரரான நிதீஷ் ராணாவின் அபாரமான ஆட்டத்தால் அந்த அணி 324 ரன்கள் குவித்தது. பின்னர் 126 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் மும்பை அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலை சந்தித்தது. அப்போது மும்பை அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷிவம் துபே ஒருபுறம் அதிரடியாக விளையாட அவருடன் முலானி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது 130 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதோடு முலானி ஒரு பக்கம் பொறுமையாக விளையாடி 63 ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டிற்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதையும் படிங்க : கிங் கோலி தலைமையில் 7 வருடம்.. ரோஹித் தலைமையில் ஒரே வருடத்தில் சறுக்கிய இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி

இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மும்பை தற்போது 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் தற்போது மும்பை அணி 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வேளையில் நாளைய மேலும் ரன்களை சேர்த்து உத்திரபிரதேச அணியை வீழ்த்த போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement