தன்னுடைய தரமான ஆல் டைம் கனவு சிஎஸ்கே அணியை வெளியிட்ட சிவம் துபே, கலாய்த்த தீபக் சஹர் – காரணம் இதோ

Shivam Dube 2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2023 சீசனில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. கடந்த வருடம் கேப்டன்ஷிப் குளறுபடியால் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த அந்த அணி இம்முறை தோனி தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்று மாபெரும் ஃபைனலில் நடப்பு சாம்பியன் குஜராத்தை ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான ஃபினிஷிங் உதவியுடன் தோற்கடித்தது ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

அந்த வெற்றியில் அனைவரும் முக்கிய பங்காற்றியதை போலவே சிவம் துபேவும் சிக்ஸர் மெஷினாக செயல்பட்டு அசத்தினார் என்றே சொல்லலாம். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பாக செயல்படாமல் குறுகிய காலத்திலேயே வெளியேறிய அவர் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளில் சுமாராகவே செயல்பட்டார். இருப்பினும் சென்னை அணியில் 2022 சீசனில் முதல் முறையாக 11 போட்டியில் 289 ரன்கள் அடித்து அசத்திய அவர் இந்த வருடம் கேரியரிலேயே உச்சகட்டமாக 14 இன்னிங்ஸில் 411 ரன்களை 159.92 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

கனவு அணி:
குறிப்பாக 35 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சென்னை அணிக்காக ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஷேன் வாட்சன் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அசத்தியதால் வரும் செப்டம்பரில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகி 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளார். இந்நிலையில் 2008 முதலே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சென்னை 14 சீசனில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 10 முறை ஃபைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற மகத்தான வரலாறு கொண்ட அணியாக போற்றப்படுகிறது.

அப்படிப்பட்ட சென்னையின் கனவு அணியை சிவம் துபே தேர்வு செய்துள்ளார். அதில் ஆரம்ப காலகட்டங்களில் மிரட்டிய ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் மேத்தியூ ஹெய்டன், மைக் ஹசி ஆகியோரை தொடக்க வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ள அவர் 3வது இடத்தில் மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவையும் 4வது இடத்தில் அம்பத்தி ராயுடுவையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

அதே போல கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ள அவர் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா தென்னாப்பிரிக்காவின் அல்பி மோர்கல், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ட்வயன் ப்ராவோ ஆகியவரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராக சாதனை படைத்த தமிழகத்தின் லக்ஷ்மிபதி பாலாஜி, ஹர்பஜன் சிங் ஆகியோரையும் தேர்வு செய்துள்ள அவர் அந்த அணியில் தமது பெயரையும் தேர்வு செய்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஏனெனில் பொதுவாகவே எந்த வகையான கனவு அணியாக இருந்தாலும் அதில் வரலாற்றில் பெரிய அளவில் அசத்தியவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். அதை விட சச்சின் முதல் லாரா வரை ஜாம்பவான்களே தங்களுடைய கனவு அணியில் தங்களின் பெயரை எப்போதும் சேர்க்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் சென்னைக்காக வெறும் 2 சீசன்களில் மட்டுமே அசத்தியுள்ள சிவம் துபே கூலாக தம்முடைய பெயரையும் ஜாம்பவான்கள் பட்டியலுடன் இணைத்துள்ளது அந்த அணி ரசிகர்களை கிண்டலடிக்க வைக்கிறது.

- Advertisement -

அந்த வரிசையில் வேகப்பந்து வீச்சாளரான தமது இடத்தில் சிவம் துபே பெயர் இருப்பதை பார்த்து தீபக் சஹர் கலாய்த்தது பின்வருமாறு. “அடுத்த வருடம் நீங்கள் என்னுடன் பவுலராக போட்டியிட்டால் நான் எங்கே செல்வது? அடுத்த வருடம் முதலில் நாம் போட்டியிட்டு தலா 1 ஓவரை போடுவோம். அதில் வெல்பவர்கள் அந்த இடத்தை பிடித்துக் கொள்வோம் சரியா” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:IND vs WI : காட்டுதமானமாக அடித்து வெற்றியை பறித்த நிக்கோலஸ் பூரான் – உலகிலேயே இந்தியாவுக்கு எதிராக 3 மிரட்டல் உலக சாதனை

அதற்கு துபே “உங்களுக்காக நான் இப்போதே என்னுடைய இடத்தை கொடுத்துள்ளேன். ஆனாலும் நீங்கள் இப்படி பேசுகிறீர்களே” என்று பதிலளித்தார். அதற்கு “எனக்கு இடம் வேண்டாம். போட்டி போட்டு பார்ப்போம்” என்று சஹார் பதிலளிக்க இறுதியாக “அப்படியே செய்வோம்” என துபே இன்ஸ்டாகிராமில் பதிலளித்தது வைரலாகி வருகிறது.

Advertisement