IND vs WI : காட்டுதமானமாக அடித்து வெற்றியை பறித்த நிக்கோலஸ் பூரான் – உலகிலேயே இந்தியாவுக்கு எதிராக 3 மிரட்டல் உலக சாதனை

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து டி20 கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் வீழ்ந்து விடவில்லை என்பதை நிரூபித்தது. மறுபுறம் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடும் இந்தியா முதல் போட்டியிலேயே 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்ற நிலைமையில் 2வது போட்டியில் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் சுமாராக செயல்பட்டு 152/7 ரன்கள் எடுத்தது. சூரியகுமார் யாதவ், பாண்டியா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் சொதப்பிய நிலையில் அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 51 (41) ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட், அல்சாரி ஜோசப், அகில் ஹொசைன் தலா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 153 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு நிக்கோலஸ் பூரான் 67 (40) ரன்கள் எடுத்து 18.5 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

பூரானின் உலக சாதனைகள்:
மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறி பந்து வீச்சில் கடைசி நேரத்தில் போராடியும் தோற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா 3 விக்கெட்களும், சஹால் 2 விக்கெட்களும் எடுத்தனர். இதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த 2 இருதரப்பு டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரின் கோப்பையை வென்று தங்களை தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் சமீபத்திய அமெரிக்க டி20 தொடரின் ஃபைனலில் சதமடித்து வெற்றி பெற வைத்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அந்த வரிசையில் இத்தொடரின் முதல் போட்டியில் 41 (34) ரன்கள் குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 32/3 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது களமிறங்கினார்.

- Advertisement -

அப்போது தமக்கே உரித்தான பாணியில் ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் விரைவாக ரன்களை சேர்த்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67 (40) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அப்படி அவர் மிடில் ஓவரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அதிரடியாக விளையாடியதாலேயே கடைசியில் 16வது ஓவரில் சஹால் 2 விக்கெட்களை எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

1. அதை விட இப்போட்டியில் எடுத்த 67 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக உலகிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை நிக்கோலஸ் பூரான் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நிக்கோலஸ் பூரான் (வெஸ்ட் இண்டீஸ்) : 524* ரன்கள்
2. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) : 500 ரன்கள்
3. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) : 475 ரன்கள்
4. கிளன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) : 438 ரன்கள்
5. தசுன் சனாகா (இலங்கை) : 430 ரன்கள்

- Advertisement -

2. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நிக்கோலஸ் பூரான் : 5*
2. ஜோஸ் பட்லர்/குயின் டீ காக்/கோலின் முன்ரோ : தலா 4

இதையும் படிங்க:ஐபிஎல் வந்த அப்றம் ரொம்ப கெட்டு போய்டீங்க, இது கூட தெரியாதா? பாண்டியா – இந்திய அணியை விளாசும் வெங்கடேஷ் பிரசாத்

3. அது போக இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நிக்கோலஸ் பூரான் : 30*
2. தசுன் சனாகா : 29
3. எவின் லெவிஸ்/கிளன் மேக்ஸ்வெல் : தலா 28

Advertisement