ஐபிஎல் வந்த அப்றம் ரொம்ப கெட்டு போய்டீங்க, இது கூட தெரியாதா? பாண்டியா – இந்திய அணியை விளாசும் வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மணி நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் போட்டியில் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் பொறுப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் அப்றம்:
அப்போட்டியில் சூரியகுமார் முதல் சஞ்சு சாம்சன் வரை முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் இளம் வீரர் திலக் வர்மா 51 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 32/3 என தடுமாறிய போது அதிரடியாக விளையாடி வெற்றியை பறித்த நிக்கோலஸ் பூரானை 67 (40) ரன்களிலும் கேப்டன் ரோவ்மன் போவலை 21 ரன்னிலும் அவுட்டாக்கிய இந்தியா 16வது ஓவரில் ரோமாரியா செஃபார்டை ரன் அவுட்டாக்கியது. மேலும் அதே ஓவரில் ஹெட்மயர் 22, ஜேசன் ஹோல்டர் 0 என 2 அதிரடி பேட்ஸ்மேன்களை சஹால் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியதால் திடீரென 129/8 என்று வெஸ்ட் இண்டீஸ் சரிந்தது.

அந்த சமயத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த சஹாலுக்கு வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டிய ஹர்திக் பாண்டியா 18 அல்லது 19வது ஓவரை அர்ஷிதீப், முகேஷ் குமார் ஆகியோருக்கு வழங்கினார். அந்த சொதப்பலை பயன்படுத்தி அகில் ஹொசைன் 16* ரன்கள் அல்சாரி ஜோசப் 10* என டெயில் எண்டர்களே தேவையான ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் பாண்டியா 3 விக்கெட்களும் சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா மீண்டும் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

மொத்ததில் நிக்கோலாஸ் பூரான் அதிரடியையும் தாண்டி போராடிக் கொண்டு வந்த இந்தியாவின் வெற்றியை சஹாலை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியாவின் முடிவே தோல்விக்கு முக்கிய காரணமென்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் டெயில் எண்டர்கள் மட்டுமே களத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெத் ஓவரில் வேகப்பந்து வீச்சாளரை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை பின்பற்றாமல் சஹாலை பயன்படுத்தி சாதுரியமாக செயல்பட்டிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என ஹர்திக் பாண்டியாவை விமர்சித்துள்ளார்.

Hardik Pandya Chahal

மேலும் சமீப காலங்களாகவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக ஏற்கனவே விமர்சித்திருந்த அவர் 2007இல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா ஐபிஎல் துவங்கப்பட்ட 2008க்குப்பின் ஒருமுறை மட்டுமே ஃபைனலுக்கு (2014) சென்று ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மிகமிக சுமாரான இந்த செயல்பாடுகளை ஒதுக்கி தள்ளுவதில் அர்த்தமில்லை. 2007 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஐபிஎல் தொடங்கியது. ஆனால் அதன் பின் களமிறங்கிய 7 முயற்சிகளில் உலகக் கோப்பையை நாம் வெல்லவில்லை. ஒரு முறை மட்டுமே ஃபைனலுக்கு சென்றோம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற அதிகப்படியான பசி உங்களுக்கு இருக்க வேண்டும்”

இதையும் படிங்க:IND vs WI : 2 வருஷமா இதைத்தான் எதிர்பார்துன்னு இருந்தேன். ஆட்டநாயகன் நிக்கோலஸ் பூரான் பேட்டி

“இப்போட்டியில் சஹால் 16வது ஓவரில் 2 விக்கெட்களை எடுத்து தம்முடைய 3வது ஓவரில் போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளுடன் சரிந்த அந்த சமயத்தில் அவர் மீண்டும் பந்து வீசவில்லை. அதனால் 9, 10வது களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக கையாண்டு விட்டனர். இது போன்ற தருணங்களில் பாட புத்தக விதிமுறைகளை பின்பற்றாமல் புத்திசாலியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement