வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் குவித்தார்.
அதனை தொடர்ந்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 40 பந்துகளில் நான்கு சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரி என 67 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது சிறப்பான பேட்டிங்கே அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற நிக்கோலஸ் பூரான் கூறுகையில் :
நான் இன்று விளையாடிய விதம் உண்மையிலேயே திருப்தியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்காக தான் காத்திருந்தேன். களத்தில் இருந்து போட்டியை முடித்து கொடுக்கவும் விரும்புகிறேன். அதே போன்று தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும் என்றும் நினைத்தும் விளையாடி வருகிறேன். நான் இதற்காக கடினமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
இதையும் படிங்க : IND vs WI : வண்டி அஹமதாபாத்தில் மட்டுமே ஓடும், மீண்டும் ஏமாற்றி வெளிநாட்டில் திணறும் இளம் வீரர் – ஆதாரத்துடன் கலாய்க்கும் ரசிகர்கள்
என்னுடைய பேட்டிங்கில் நிறைய குறைகளை இருந்துள்ளது அதனால் நான் விளையாடும் அணிகளின் நிறைய தோல்விகளுக்கு காரணமாகவும் இருந்துள்ளேன். தற்போது அதையெல்லாம் தாண்டி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே அதிரடியாகவும், பாசிட்டிவாகவும் விளையாடி வருவதாக நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.