மினி யுவராஜ் சிங் மாதிரி ஆடும்.. அவருக்கு 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுக்கலாம்.. அஸ்வின் பாராட்டு

Ravichandran Ashwin
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா உலகிலேயே அதிக தொடர்களை ஒயிட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் சில இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

குறிப்பாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். அதிலும் குறிப்பாக 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த சிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியதால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

மினி யுவராஜ்:
கடந்த 2019இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட துபே கடந்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் 411 ரன்கள் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ஃபார்முக்கு திரும்பினார். அதனால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதனால் காயத்தை சந்தித்துள்ள பாண்டியாவுக்கு பதிலாக 2024 டி20 உலகக் கோப்பையில் இவரை தேர்வு செய்யலாம் என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை அணிக்கு வருவதற்கு முன்பு வரை தடுமாறிய துபே தற்போது தோனி தலைமையில் விளையாடிய பின் மினி யுவராஜ் சிங் போல அசத்தும் அளவுக்கு முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் ஸ்பின்னர்களை தெறிக்க விடும் திறமையை கொண்ட துபே 2024 டி20 உலகக் கோப்பைக்கு சரியாக இருப்பார் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவரை யுவராஜ் சிங்கின் லைட் பேக்கேஜ் என்று நான் பொறுமையுடன் சொல்வேன். ஏனெனில் அவரின் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் டவுன்ஸ்விங் எட்டிப்பார்த்தது. அதற்காக அவர் யுவராஜ் போல செயல்படுகிறார் என்று நான் சொல்லவில்லை”

இதையும் படிங்க: 20/3 என சரிந்த நியூஸிலாந்து.. வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தானை பிலிப்ஸுடன் சேர்ந்து நொறுக்கிய சிஎஸ்கே வீரர்

“ஆனால் அவர் விளையாடுவது எனக்கு யுவராஜை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக சுழல் பந்துகளை நேராக அவர் அடிப்பதில் அழகு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய வீரர். இருப்பினும் சிவந்து துபேவின் வளர்ச்சியை கிறிஸ்து பிறப்பதற்கு முன் பின் என்பது போல அவருடைய கேரியரை சிஎஸ்கே அணிக்கு முன் பின் என பிரிக்கலாம். சிஎஸ்கே சூழ்நிலைகளை (சேப்பாக்கம்) போலவே வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் இருக்கும் என்பதால் அங்கே அவரால் முரட்டுத்தனமான சிக்சர்களை அடிக்க முடியும்”என்று கூறினார்.

Advertisement