20/3 என சரிந்து நியூஸிலாந்து.. வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தானை பிலிப்ஸுடன் சேர்ந்து நொறுக்கிய சிஎஸ்கே வீரர்

NZ vs PAK 4
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் புதிய கேப்டன் சாகின் அப்ரிடி தலைமையிலும் முன்னேற்றத்தை காணாமல் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

அந்த நிலைமையில் இத்தொடரின் 4வது போட்டி ஜனவரி 18ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி முற்பகல் 11.40 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 1 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வானுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த பாபர் அசாம் 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 19 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

தொடர் தோல்வி:
போதாகுறைக்கு அடுத்து வந்த பகார் ஜமானை 9 ரன்னில் காலி செய்த லாக்கி பெர்க்குசன் அதற்கடுத்ததாக வந்த ஃபர்கானையும் 1 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 86/4 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய முகமது ரிஸ்வான் நியூசிலாந்து பவுலர்களுக்கு சவாலாக மாறி அரை சதம் கடந்து 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 90* (63) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

அவருடன் கடைசி நேரத்தில் முகமது நவாஸ் அதிரடியாக 21* (9) ரன்கள் எடுத்ததால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவரில் 158/5 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 159 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு கடந்த போட்டியில் சதமடித்த ஃபின் ஆலனை 8 ரன்களில் முதல் ஓவரிலேயே அவுட்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி கடைசி பந்தில் டிம் சைஃபர்ட்டை கோல்டன் கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அத்துடன் அடுத்ததாக வந்த வில் எங்கையும் 4 ரன்களில் அவர் காலி செய்ததால் 20/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாறியது. அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய இந்த ஜோடி பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி கடைசி வரை அவுட்டாகாமல் 18.1 ஓவரில் நியூசிலாந்தை 159/3 ரன்கள் எடுக்க வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

இதையும் படிங்க: இதுவே நமக்கு நடந்துருந்தா நேர்மையை பற்றி பேசுவீங்களா.. இந்திய ரசிகர்களுக்கு அஸ்வின் கேள்வி

அதில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட தேர்வாகியுள்ள மிட்சேல் அதிகபட்சமாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 72* (44) ரன்களும் கிளன் பிலிப்ஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 70* (52) ரன்கள் எடுத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா ரன்கள் எடுக்க தவறிய பாகிஸ்தான் 20/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்தை கட்டுப்படுத்தியும் பின்னர் சொதப்பி 4வது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement