இதுவே நமக்கு நடந்துருந்தா நேர்மையை பற்றி பேசுவீங்களா.. இந்திய ரசிகர்களுக்கு அஸ்வின் கேள்வி

Ashwin IND vs AFG
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா ஒய்ட் வாஷ் செய்து வென்றது. அத்தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இந்தியா 20 ஓவரில் எடுத்த அதே 212 ரன்களை ஆப்கானிஸ்தானும் சரியாக எடுத்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்தது.

அதன் காரணமாக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் ரோகித் சர்மா 2 முறை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது சர்ச்சையாக அமைந்தது.

- Advertisement -

அஸ்வின் கேள்வி:
அதே போல சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி கடைசி பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுத்தார். அப்போது ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை எடுத்து ஸ்டம்ப் நோக்கி எரிந்தார். ஆனால் அந்த பந்து தன் மீது பட்டு வேறு பக்கம் சென்றதை பயன்படுத்திய முகமது நபி எக்ஸ்ட்ராவாக 2 ரன்கள் எடுத்தார்.

அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நேர்மை தன்மை இல்லாமல் எப்படி நீங்கள் ரன்கள் எடுக்கலாம்? என்று முகமது நபியிடம் வாதிட்டார். அதே போல 1 ரன் கூட வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர்.

- Advertisement -

ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் ஒரு ரசிகனாக இதை நான் சொல்கிறேன். அதாவது நாளை ஒரு உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சூப்பர் ஓவரில் 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம்”

இதையும் படிங்க: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது.. இந்தியா இங்கிலாந்து தொடரை எந்த சேனலில் பாக்கலாம்? – ஒளிபரப்பு விவரம் இதோ

“அப்போது இப்படி எறிந்த பந்து நம்முடைய கையுறையில் பட்டால் நாமும் ரன்கள் எடுக்க ஓடுவோம். அந்த சூழ்நிலையில் ஒரு வீரர் ஏன் ரன் எடுக்க ஓடக்கூடாது? ஒரு பவுலர் விக்கெட்டை எடுப்பதற்காக பந்து வீசும் போது தான் நீங்கள் ரன்கள் எடுக்க முடியும். அது உடலில் பட்ட பின் ஓடினால் லெக் பைஸ், படாமல் ஓடினால் பைஸ். அதே போல ஃபீல்டர் ரன் அவுட் செய்வதற்காக தானே பந்தை எரிகிறார்? அது என்னுடைய உடல் மீது பட்டு சென்றாலும் ரன் எடுப்பதற்கான உரிமையில் நான் ஓடுவேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரிக்கெட்டின் நேர்மை தன்மை எங்கே? என்னை மன்னிக்கவும்” என்று கூறினார்.

Advertisement