வீடியோ : ரஷீத் கானையே மிரளவிட்ட சிவம் துபே – ஷேன் வாட்சனின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அசத்தல் – விவரம் இதோ

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்களும் சஹா 54 (39) ரன்களும் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து வந்த சிவம் துபே தடுமாற்றமாக செயல்பட்டதால் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ரகானே 27 (13) ரன்களை விளாசி அழுத்தத்தை உடைத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சிக்ஸர் துபே:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய சிவம் துபே ஒரு வழியாக ரசித் கான் வீசிய 12வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு மிகப்பெரிய அழுத்தத்தை உடைத்தார். அந்த நிலையில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய ராயுடு 19 (8) ரன்களை எடுத்து அவுட்டாக அடுத்து வந்த தோனி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டடாலும் மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்கவிட்ட ஜடேஜா 15* (6) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் மோஹித் சர்மா 3 விக்கெட் எடுத்தும் குஜராத் கோப்பையை தக்க வைக்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது. மறுபுறம் சென்னையின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிறைய வீரர்களில் சிவம் துபே 32* (21) ரன்களை விளாசி துருப்பச்சீட்டுக்காக செயல்பட்டார் என்றே சொல்லலாம். கடந்த 2019இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட அவர் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற ஐபிஎல் அணிகளிலும் எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அதன் காரணமாக கழற்றி விடப்பட்ட அவரை கடந்த வருடம் சென்னை 4 கோடிக்கு வாங்கியது.

- Advertisement -

அதில் 11 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்து தோனி தலைமையில் முதல் முறையாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்த வருடம் அதையும் மிஞ்சி 14 இன்னிங்க்ஸில் 411 ரன்களை 159.92 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த காலங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டான அவர் இம்முறை அதற்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அதே பந்துகளை நட்சத்திர பவுலர்கள் வீசிய போதெல்லாம் சிக்ஸர்களாக பறக்க விட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

1. அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கான் ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சென்னை வீரர் என்ற ஷேன் வாட்சனின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சிவம் துபே : 35* (2023)
2. ஷேன் வாட்சன் : 35 (2018)
3. ட்வயன் ஸ்மித் : 34 (2014)
4. அம்பத்தி ராயுடு : 34 (2018)
5. எம்எஸ் தோனி : 30 (2018)

- Advertisement -

2. அத்துடன் இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. பஃப் டு பிளேஸிஸ் : 36
2. சிவம் துபே : 35
3. சுப்மன் கில் : 33

இதையும் படிங்க:IPL 2023 : இந்தியாவின் வருங்காலமாக – விராட் கோலியை மிஞ்சி இரட்டை சாதனை படைத்த சுப்மன் கில், விருதுகளை குவித்து அசத்தல்

அப்படி மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவிய அவரை சிக்ஸர் மெஷின் என்று அந்த அணி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். மேலும் 29 வயதாகும் அவர் அடுத்த வரும் சீசன்களிலும் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement