சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அதோடு சென்னை அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது :
சென்னை அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது :
20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை மட்டுமே குவித்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக எட்டாவது வீரராக களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி என 26 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த குஜராத் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் கூறுகையில் : சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து விளையாடிய இந்த இன்னிங்ஸ் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவருமே விளையாடும் போது அந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது. இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நானும் எனது பங்கிற்கு 2 விக்கெட் கைப்பற்றினேன். தற்போது என்னுடைய உடற்தகுதி நன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க : 1 லட்சம் பேர் இருக்கும்போது எங்களை என்ன பண்ண முடியும்.. சி.எஸ்.கே-வை வீழ்த்திய பிறகு – சுப்மன் கில் பேட்டி
இருந்தாலும் சிறிய அளவிலான முதுகு வலி தற்போதும் இருக்கிறது. இருப்பினும் விரைவில் முழுவதுமாக குணமடைய முடியும் என்று நம்புகிறேன். தோனிக்கு எதிராக பந்து வீசும் போது எப்பொழுதுமே எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கும். அவர் களத்திற்கு வந்து ஆடினால் பாசிட்டிவ் எனர்ஜி இருப்பதை உணர்கிறேன். தோனியுடன் இணைந்து மைதானத்தில் விளையாடுவதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.



