சி.எஸ்.கே அணிக்கெதிராக விளையாடிய அனைத்து குஜராத் வீரர்களுக்கும் அபராதம் விதிப்பு – ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

CSK-vs-GT
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

சிஎஸ்கே அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றி தேவை என்கிற நிலையில் நேற்று சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே வேளையில் குஜராத் அணியின் இந்த சிறப்பான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பாராட்டினையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் விளையாடிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் உட்பட இம்பேக்ட் பிளேயரோடு சேர்த்து 12 வீரர்களுக்கும் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்பதன் காரணமாக குஜராத் அணிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் முதல் முறையாக மெதுவாக பந்து வீசியதற்காக சுப்மன் கில் மட்டும் தண்டிக்கப்பட்டு இருந்தார்.

இதையும் படிங்க : தோனி களத்திற்கு வந்தாலே எனக்கு இப்படித்தான் இருக்கும்.. தோனிக்கு எதிராக விளையாடுவது குறித்து – ரஷீத் கான் நெகிழ்ச்சி

இவ்வேளையில் தற்போது இரண்டாவது முறையாக இந்த தவறு நடந்துள்ளது. இதன் காரணமாக கேப்டன் சுப்மன் கில்லிற்கு 24 லட்சம் ரூபாயும், அதனை தவிர்த்து அணியில் உள்ள 11 வீரர்களுக்கும் தலா 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement