மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த தல ரசிகர்.. குறும்புடன் காப்பாற்றிய தோனியின் செயல் – நடந்தது என்ன?

Dhoni-Fan
- Advertisement -

குஜராத் அணிக்கு எதிராக நேற்று நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தது.

இருந்தாலும் இந்த போட்டியின் போது கடைசி நேரத்தில் தோனி களமிறங்கியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்த வகையில் இந்த போட்டியின் போது 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க முதல் 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

பின்னர் டேரல் மிட்சல் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரது அரை சதத்தால் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சரியாவே சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஷிவம் துபே ஆட்டம் இழந்த பிறகு எட்டாவது வீரராக தோனி களமிறங்கி 11 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி என ஆட்டம் இழக்காமல் 26 ரன்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது தோனி விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரது ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்த பாதுகாப்புகளையும் மீறி மைதானத்தில் நடுவே ஓடிவந்து அவரது காலில் விழுந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியற்றது. பொதுவாகவே தோனியின் காலில் ரசிகர்கள் இதேபோன்று மைதானத்திற்குள் ஓடி வந்து விழுவது வழக்கமான ஒன்று தான்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிராக விளையாடிய அனைத்து எல்லாருக்குமே அபராதம் விதிப்பு – ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

இருப்பினும் நேற்று ரசிகர் உள்ளே ஓடிவந்த போது தோனி அவரிடம் இருந்து விலகும் விதமாக குறும்பு தனமாக சிறிது தூரம் நகர்ந்து ஓடினார். பின்னர் ரசிகர் தனது அருகில் வந்ததை பார்த்த பிறகு அவரை கட்டித் தழுவி பாதுகாவலர்களிடம் அவரை ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ரசிகரின் தோல் மீது கை போட்டு சற்று தூரம் அழைத்துச் சென்று விட்டு வந்தார்.

Advertisement