இந்திய அணியில் இருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க அவரை புறக்கணிக்காதீங்க.. ஹர்பஜன் கருத்து

Harbhajan Singh
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களின் சொந்த ஊரில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

முன்னதாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக 60* ரன்கள் எடுத்த சிவம் துபே பந்து வீச்சில் 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார். அதனால் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். 2019இல் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டதால் மறு வாய்ப்பு பெறாமல் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

நீண்ட கால தேடல்:
இருப்பினும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதற்கு உதவினார். அதை தொடர்ந்து தற்போது சீனியர் அணியிலும் சிறப்பாக செயல்பட்டு நிறைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்தியா தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிரச்சனையை நீண்ட காலத்துக்கு தீர்க்கக் கூடியவராக சிவம் துபே இருப்பார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்பை விட தற்போது துபே எளிதாக புறக்கணிக்க முடியாத அளவுக்கு நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சிவம் துபேவிடம் இப்போது நான் பார்க்கும் மிகப்பெரிய மாற்றம் என்னவெனில் அவருடைய பவுலிங் வேகமாகும். தற்போது அவர் தன்னுடைய பந்து வீச்சில் சற்று வேகத்தை அதிகமாக சேர்த்துள்ளார். அவருடைய வேகம் தற்போது நன்றாகவே முன்னேறியுள்ளது. அதே போல தன்னுடைய ஃபிட்னஸில் அவர் வேலை செய்துள்ளதும் தெரிகிறது. எனவே இந்தியா நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அவர் இருக்கலாம்”

இதையும் படிங்க: டிகே இருந்துமா இந்த நிலை.. இங்கிலாந்து லயன்ஸ் அணியை சுருட்டிய இந்தியா ஏ அணி

“ஒருவேளை இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரை இனிமேலும் இந்திய அணி புறக்கணிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறினார். அதே போல அடிக்கடி காயமடைந்து வெளியேறும் பாண்டியாவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement