டிகே இருந்துமா இந்த நிலை.. இங்கிலாந்து லயன்ஸ் அணியை சுருட்டிய இந்தியா ஏ அணி

IND a vs ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் வரும் ஜனவரி 25 முதல் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அதற்கு தயாராவதற்காக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் 3 பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன. அந்த டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக இதில் இரு அணிகளைச் சேர்ந்த சில முக்கியமான வீரர்களும் விளையாடுகின்றனர்.

அந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் முதல் பயிற்சி போட்டி ஜனவரி 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

தடுமாறும் லயன்ஸ்:
அந்த அணிக்கு கிட்டன் ஜென்னிங்ஸ் 25, அலெக்ஸ் லீஸ் 35, ஒலிவர் ப்ரைஸ் 7, கேப்டன் ஜோஸ் போகண்னோன் 8, ஜேம்ஸ் ரெவ் 1 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 45, டான் மௌஸ்லி 60 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக மாணவ் சுதர் 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்தியா ஏ அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலை கொடுத்து முதல் நாள் முடிவில் 123/1 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 36 ரன்களில் அவுட்டானாலும் இளம் வீரர் ரஜப் படிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 61* ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

அவருடன் பிரதோஷ் பால் 24* ரன்கள் எடுத்துள்ளார். அதனால் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை விட இந்தியா ஏ இன்னும் 110 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் கைவசம் 9 விக்கெட்டுகள் இருப்பதால் வலுவான நிலையிலேயே இருக்கிறது என்று சொல்லலாம். முன்னதாக இந்த பயிற்சி போட்டிகளில் இந்தியா ஏ அணியை சமாளிப்பதற்காக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை அந்நாட்டு வாரியம் நியமித்தது.

இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கே இந்த நிலைமையா? டீம்’ன்னா இந்தியா மாதிரி இருக்கணும்.. லெஜெண்ட் க்ளைவ் லாய்ட்

குறிப்பாக இந்திய சூழ்நிலைகளை இங்கிலாந்து அணியினர் அறிந்து கொள்வதற்காக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விரைவில் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் எப்படி இங்கிலாந்து அணியினருடன் சேரலாம் என்று ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் இருந்துமா இப்படி என்று சொல்லும் அளவுக்கு இப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement