ரோஹித், கோலிக்கே இந்த நிலைமையா? டீம்’ன்னா இந்தியா மாதிரி இருக்கணும்.. லெஜெண்ட் க்ளைவ் லாய்ட்

Clive Llyod
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. அதில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ள இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் எப்படிப்பட்ட வீரர்கள் விளையாடுவார்கள் என்பது தற்சமயத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் சுமாராக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்தனர். அதனால் அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போல் கடந்த ஒன்றரை வருடங்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தனர்.

- Advertisement -

தரமான இந்தியா:
இருப்பினும் தற்போது நடைபெறும் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடும் அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. ஆனாலும் 2026 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போதே அவர்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு விளையாட தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும் நன்றாக செயல்பட்டு தங்களுடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் முன்னாள் கேப்டன் க்ளைவ் லாய்ட் கூறியுள்ளார். மேலும் ஒரு அணி இப்படித்தான் ஆரோக்கியமான போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும் என பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் உங்களுடைய சிறந்த அணியை தேர்வு செய்ய விரும்புவீர்கள். அதே சமயம் உங்களுடைய அணி இளம் வீரர்களால் மட்டும் நிறைந்திருக்கக் கூடாது. உங்களுக்கு அனுபவமும் தேவை. விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். ரோஹித் சர்மா நல்ல கேப்டன். எனவே நீங்கள் நல்ல அணியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் சில இளம் வீரர்களையும் தேர்வு செய்யலாம்”

இதையும் படிங்க: விராட் கோலியின் வருகையால் 2 ஆவது டி20 போட்டியில் வாய்ப்பை இழக்கப்போகும் வீரர் – யார் தெரியுமா?

“ஏனெனில் உங்களிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இளம் வயதுடைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அதிக வயதுடைய வீரர்களை தள்ளுகிறார்கள். அப்படித் தான் ஒரு அணி இருக்க வேண்டும். ஆனாலும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வலுவானதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement