உழைப்புக்கு கிடைக்கப் போகும் பரிசு.. ஜெய்ஸ்வால், சிவம் துபேவுக்கு பிசிசிஐ வழங்கப் போகும் பிரமோஷன்

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்க்கிறது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.

அதில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான சிவம் துபே சுமாராக செயல்பட்டதால் ஆரம்பத்திலேயே கழற்றி விடப்பட்டார். அதன் பின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் தடுமாறிய அவரை 2022இல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நம்பி வாங்கியது. அங்கு தோனி தலைமையில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய துபே 2023 சீசனில் 411 ரன்கள் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

விரைவில் பிரமோஷன்:
அதன் காரணமாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். மறுபுறம் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜெயஸ்வால் 3 வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வந்தார்.

அதன் உச்சமாக கடந்த ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் குவித்து அதிவேகமாக அரை சதமடித்து இரட்டை சாதனை படைத்த அவர் 2023 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்து இந்தியாவின் வெற்றியில் உதவிய அவர் டி20 தொடரிலும் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சதமடித்து இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவிய அவர் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் மற்றும் துபே ஆகியோரை 2024 வருடத்திற்கான இந்திய வீரர்களின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சேர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அதை மட்டும் செஞ்சா இங்கிலாந்துக்கு லாட்டரி தான்.. இந்தியாவுக்கு பதகமாகிடும்.. எச்சரித்த நாசர் ஹுசைன்

அதாவது இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருங்கால வீரர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ள ஜெய்ஸ்வால் மற்றும் துபே ஆகியோரின் பெயர்களை 2024 சம்பள பட்டியலில் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதனால் வருங்காலங்களில் அந்த இருவருக்கும் ஓரளவு நிலையான வாய்ப்புகளும் இந்தியாவுக்காக விளை

Advertisement