அதை மட்டும் செஞ்சா இங்கிலாந்துக்கு லாட்டரி தான்.. இந்தியாவுக்கு பதகமாகிடும்.. எச்சரித்த நாசர் ஹுசைன்

Nasser Hussain 2
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கடைசியாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

ஆனால் அதன் பின் கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இந்தியாவில் வெற்றி காண முடியாமல் வெளிநாட்டு அணிகள் திண்டாடுகின்றன.

- Advertisement -

லாட்டரி அடிக்குமா:
ஆனால் இம்முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் முறையை பின்பற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் எதிரணிகளைப் பந்தாடும் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே பஸ்பாஸ் எனப்படும் புதிய அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து துவம்சம் செய்யுமா என்பது அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் நாளிலிருந்தே பந்து சுழலும் அளவுக்கு பிட்ச்களை இந்தியா தயாரித்தால் அது அவர்களுக்கே எதிராக அமையலாம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார். மறுபுறம் தாறுமாறாக சுழலக்கூடிய பிட்ச்கள் இருந்தால் அது இங்கிலாந்துக்கு லாட்டரியாக அமையும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை நான் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தால் ஓரளவு சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நல்ல பிட்ச்களை கேட்பேன். ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் அவர்களுடைய ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய ஸ்பின்னர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை சிறப்பாக செயல்பட்டு பின்னுக்கு தள்ளுவார்கள். ஒருவேளை அவர்கள் அதிகமாக சுழலும் பிட்ச்களை கேட்டால் அது லாட்டரி போல் அமைந்து விடும்”

இதையும் படிங்க: உங்க திறமைக்கு இப்படி சொதப்புவது நியாயமில்ல.. இளம் இந்திய வீரர் மீது சல்மான் பட் ஏமாற்றம்

“ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் இங்கிலாந்தும் தங்களுடைய ஸ்பின்னர்களை ஆட்டத்திற்கு கொண்டு வரும். பஸ்பாஸ் விளையாடும் விதத்திற்கும் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் விதத்திற்கும் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கண்டு இறந்து விட மாட்டார்கள். கடந்த சுற்றுப்பயணத்தைப் போல இம்முறையும் இங்கிலாந்து விளையாடினால் ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் தங்களுடைய மைதான பராமரிப்பாளர்களிடம் இன்னும் அதிகமாக சுழலக் கூடிய பிட்ச்களை கொடுக்குமாறு கேட்பார்கள்” என்று கூறினார்.

Advertisement