நான் தப்பு பண்ணிட்டேன்.. அது எனக்கே தெரியுது.. உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட – ஷிவம் துபே

Dube
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஜனவரி 14-ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நடைபெற்று வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும் இந்த வெற்றியானது டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக கடைசி தொடரில் பெற்ற வெற்றி என்பதாலும் இந்திய வீரர்கள் மத்தியில் இந்த வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்த ஷிவம் துபே பேட்டிங்கில் 33 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 63 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அதேபோன்று பந்துவீச்சிலும் அவர் 3 ஓவர்களை வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இப்படி பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி போட்டியை முடித்துக் கொடுத்தாலும் பந்துவீச்சில் தான் சற்று மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக போட்டி முடிந்து ஷிவம் துபே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் பேட்டிங்கில் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறேனோ அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் கடினமாக உழைத்து வருகிறேன். முதல் போட்டியின் போது என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த இரண்டாவது போட்டியில் நான் சிறப்பாக பந்து வீசவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : அந்த இளம் வீரரை 2024 டி20 உ.கோ அணியில் எடுக்கலான அது நியாயமே இல்ல.. ரெய்னா கருத்து

இருப்பினும் இது டி20 போட்டிகளில் நடைபெறக்கூடிய ஒன்றுதான் என்று வெளிப்படையாகவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். அவர் கூறியது போன்றே முதல் போட்டியின் போது 2 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்த அவர் நேற்றைய போட்டியின் போது 3 ஓவர்களில் 36 ரன்கள் ரன்களை கசியவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement