INDvsWI : அதிரடியில் மிரட்டக்கூடிய இவரு டி20 தொடரில் ஆடுவாரு – வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்த இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே டி20 தொடரில் அடைந்த வெற்றியை தொடர்ந்து தற்போது டி20 தொடரையும் வாஷ்அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

IND vs WI

- Advertisement -

அதே வேளையில் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக வெஸ்ட் இண்டிஸ் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று நடைபெற உள்ள வேளையில் இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரன் ஹெட்மயர் விளையாடுவார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கடைசியாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஹெட்மயர் காயம் காரணமாக சமீபத்திய தொடர் எதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாத வேளையில் ஒருநாள் தொடருக்கான கடைசி போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனாலும் முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் விளையாடாத ஹெட்மயர் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

hetmyer

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர இளம் வீரரான ஹெட்மயர் டி20 போட்டிகளில் அசத்தக்கூடியவர் என்பதனால் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர அனுபவ வீரரான பொல்லார்டு கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. அவரது தலைமையில் இளம் வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை t20 போட்டிகளில் விளையாட உள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ :

இதையும் படிங்க : தேவையில்லாமல் சச்சினை வம்பிழுந்து வாங்கிகட்டிக்கொண்ட அசோக் திண்டா – வரலாற்று ருசிகர பின்னணியை பகிரும் முன்னாள் வீரர்

1) நிக்கோலஸ் பூரன், 2) ரோவ்மன் பவல், 3) ப்ரூக்ஸ், 4) டாம்னிக் ட்ராக்ஸ், 5) ஷிம்ரன் ஹெய்ட்மயர், 6) ஜேசன் ஹோல்டர், 7) அக்கில் ஹூசைன், 8) அல்ஜாரி ஜோசப், 9) பிரன்டன் கிங், 10) கைல் மெயர்ஸ், 11) ஒபெட் மெக்காய், 12) கீமோ பவுல், 13) ரோமாரியோ செப்பர்ட், 14) ஓடியன் ஸ்மித், 15) டீவன் தாமஸ், 16) ஹைடன் வால்ஸ்.

Advertisement