தேவையில்லாமல் சச்சினை வம்பிழுத்து வாங்கிகட்டிக்கொண்ட அசோக் திண்டா – வரலாற்று ருசிகர பின்னணியை பகிரும் முன்னாள் வீரர்

Sachin Tendulkar Ashok Dinda
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதிலேயே சர்வதேச அரங்கில் அறிமுகமாகி வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்டு உலகிலேயே அதிக ரன்களையும் 100 சதங்களை அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்த மகத்தானவர். இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது 24 வருடங்கள் சுமந்த அவர் கிளன் மெக்ராத், சோயப் அக்தர், பிரட் லீ உட்பட வரலாற்றின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பெருமைக்குரியவர். பேட்டிங் துறையில் கிட்டத்தட்ட அனைத்து சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ள அவர் எத்தனையோ தருணங்களில் தரமான பவுலர்களுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்தவர்.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar
Shoaib-Akhtar-Sachin-Tendulkar

குறிப்பாக எப்போதுமே வம்பிழுக்கும் வகையில் பந்து வீசக்கூடிய பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை பலமுறை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்ட அவர் கடந்த 2003 உலக கோப்பையில் அக்தர் வீசிய ஒரு பந்தை அசால்டாக சிக்சராக தெறிக்கவிட்டதை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதனாலேயே அவரின் விக்கெட்டை எடுப்பதற்கு துடிக்கும் எதிரணி பவுலர்கள் தரமாக பந்து வீசினாலும் வாய்த்தகராறு செய்யாமல் சற்று அடக்கியே வாசிப்பார்கள்.

- Advertisement -

அசோக் திண்டா:
அது ஒரு புறமிருக்க மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அசோக் திண்டா கடந்த 2009இல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும் சர்வதேச அளவில் அதிக ரன்களை வாரி வழங்கியதால் மொத்தமாக 25 போட்டிகளுடன் காணாமல் போனார். ஐபிஎல் தொடரிலும் பெரும்பாலான போட்டிகளில் வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக பந்துவீசிய அவரை ஏராளமான பேட்ஸ்மேன்கள் சரமாரியாக அடித்து கேரியரை முடித்து விட்டார்கள் என்றே கூறலாம்.

Dinda 1

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அசோக் திண்டா என்றால் மோசமான பந்து வீச்சாளர் என்ற கருத்து ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் இப்போதும்கூட உலக அளவில் ஏதேனும் ஒரு போட்டியில் ஏதேனும் ஒரு பவுலர் ரன்களை வாரி வழங்கினால் உடனடியாக அவரை அசோக் திண்டா அகாடமியின் அடுத்த வாரிசு என்ற ரசிகர்கள் கிண்டலடிப்பார்கள்.

- Advertisement -

வாங்கிகட்டிக்கொண்ட திண்டா:
இந்த நிலையில் கடந்த 2007இல் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பெங்கால் அணிகள் மோதியபோது இளம் வீரராக இருந்த அசோக் திண்டா தேவையில்லாமல் சச்சினை காயமடையும் வகையில் பந்துவீசி வாய் தகராறு செய்ததாக தெரிவிக்கும் மற்றொரு முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ் குப்தா அதற்காக சச்சின் அவரை வெளுத்து வாங்கி சதமடித்த ருசிகரமான பின்னணியை பகிர்ந்துள்ளார். அப்போட்டியில் பெங்கால் அணியின் கேப்டனாக இருந்த அவர் தற்போது இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் நிலையில் இந்த பழைய நினைவை பகிர்ந்து பேசியது பின்வருமாறு.

Deepdas-gupta

“அது பெங்கால் மற்றும் மும்பை அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியாகும். அதில் பெங்கால் கேப்டனாக டாஸ் வென்ற நான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தேன். மறுபுறம் மும்பையில் ஜாஹீர் கான், அஜித் அகர்கர், ரோகித் சர்மா மற்றும் சச்சின் என்ற மகத்தானவர்கள் இருந்தனர். அன்றைய நாளில் ஈரப்பதமான சூழ்நிலை நிலவியதால் எங்களது பந்து வீச்சாளர்கள் ஒருசில அடுத்தடுத்த விக்கெட்டுக்களை எடுத்ததால் சச்சின் பேட்டிங் செய்ய வந்தார். அது அசோக் திண்டாவுக்கு முதல் வருடம் என்பதால் வேகத்துடனும் துடிப்புடனும் இருந்தார்”

- Advertisement -

“இருப்பினும் சச்சினுக்கு பந்து வீசும்போது தேவையின்றி எதுவும் செய்யாமல் வேலையை மட்டும் செய்யுமாறு ஏற்கனவே நான் கூறியிருந்தேன். ஏனெனில் பொதுவாகவே பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவுக்கு பந்து வீசினால் உடனடியாக அவர்களை வம்பிழுக்கும் வகையில் 2 – 3 அடிகள் முன்னே சென்று முறைத்து பார்ப்பார். எனவே அதுபோன்ற சேட்டைகளை சச்சினிடம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் கூறியிருந்தேன். அந்த நிலைமையில் அவர் வீசிய ஒரு ஷார்ட் பந்து பவுன்ஸ் ஆகி சச்சினின் கையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது”

“வலியால் கைகளை உதறிய அவர் காயமடைந்தார் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் அப்போது அவரிடம் சென்ற திண்டா முறைத்து பார்த்தார். அதை பார்த்த எனக்கு “சொல்லியும் ஏன் இப்படி செய்கிறாய்” என்ற எண்ணங்கள் ஓடியது. உடனடியாக அவரிடம் சென்ற நான் மேற்கொண்டு எதையும் செய்யாமல் அமைதியாக பந்து வீசுமாறு கூறினேன்”

இதையும் படிங்க: ENG vs RSA : மிரட்டிய இங்கிலாந்தை 6 வருடங்கள் கழித்து வந்து அடித்து நொறுக்கிய தெ.ஆ வீரர் – அபார வெற்றியின் முழுவிவரம்

“ஆனால் அதற்கு பதிலடியாக அதன்பின் அபாரமாக பேட்டிங் செய்த சச்சின் 80 அல்லது 100 ரன்களை வெளுத்து வாங்கினார் என்று நினைக்கிறேன். எனவே களத்தில் நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதில் கவனம் வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் உங்களுக்கு தண்டனை கொடுத்து விடுவார்கள்” என்று கூறினார். அவர் கூறும் அந்த போட்டியில் சச்சின் 105 ரன்கள் விளாசி திண்டாவை வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement